விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனையில் கலக்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் முதன்மையான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக என்டார்க் 125 உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வந்த இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்திய மார்க்கெட்டில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் பிரபலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் மாத விற்பனை இதற்கு ஒரு சாட்சி.

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 27,390 என்டார்க் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதம், அதாவது 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 20,715 என்டார்க் 125 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் 6,675 யூனிட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

அதாவது என்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனை சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எட்டியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது டிவிஎஸ் லைன்அப்பில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்று மட்டுமல்ல.

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாகவும் என்டார்க் 125 உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய என்டார்க் ரேஸ் எடிசனை அறிமுகம் செய்தது. இது T-வடிவ எல்இடி டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லைட்டை பெற்றுள்ளது. சிகப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று வித்தியாசமான பெயிண்ட் ஸ்கீம்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் வந்தது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

ஸ்டாண்டர்டு என்டார்க் 125 ஸ்கூட்டரை காட்டிலும் ரேஸ் எடிசனின் விலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் அதிகம். எனினும் இந்த 2 ஸ்கூட்டர்களும் ஒரே 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைதான் பகிர்ந்து கொண்டுள்ளன. பிஎஸ்-4 விதிகளுக்கு இணக்கமான இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 9.4 எச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

MOST READ: கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார்...?

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

தற்போதைய நிலையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி என்டார்க் 125 ஸ்கூட்டரை 59,512 ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்து வருகிறது. இது ட்ரம் பிரேக் வேரியண்ட்டின் விலையாகும். ஆனால் டிவிஎஸ் நிறுவனம் இதன் இன்ஜினை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும்போது இதன் விலை 6,000 - 7,000 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து வாகன நிறுவனங்களும் தங்கள் இன்ஜின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: வானில் 2 விமானங்கள் சந்தித்து கொண்டால் பைலட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாத உண்மை

விற்பனையில் கலக்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்... எவ்வளவு சதவீதம் வளர்ச்சி தெரியுமா?

அதே சமயம் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் டிஸ்க் பிரேக் வேரியண்ட் 60,595 ரூபாய் என்ற விலையிலும், ரேஸ் எடிசன் மாடலானது 63,475 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய மார்க்கெட்டில் தற்போது மந்தநிலை நிலவி வரும் சூழலிலும், என்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனை கணிசமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS NTorq 125 November 2019 Sales Report. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X