இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு இலவச அப்கிரேட்டை சேவையை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக, தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுத்து வருகின்றது.

இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிவிஎஸ் நிறுவனம் தனது புத்தம் புதிய ஆர்ஆர் 310 மாடல் பைக்கை கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பைக் ஸ்போர்டி மற்றும் ஸ்டைல் லுக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ G310R மற்றும் GS ஆகிய பைக் மாடல்களில் இருக்கும் அதே எஞ்ஜின் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 313சிசி கொண்ட எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 33.5 பிஎச்பி பவரையும், 27.3என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

இதேபோன்று, அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அப்சைடு டவுண் ஃபோர்க்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்ர் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அப்பாச்சி குடும்பத்தின் வரிசையில் வரும் அதிக சக்தி கொண்டாக பைக்காக இந்த ஆர்ஆர்310 மாடல் இருக்கின்றது.

இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனம், ஏற்கனவே விற்பனைச் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை இலவசமாக அப்கிரேட் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை வாடிக்கையாளர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றது. அதன்படி, அதீத பெர்ஃபார்மென்ஸை பைக் வெளிப்படுத்தும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் இசியூ-வை அப்கிரேட் செய்ய இருக்கின்றது.

இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

மேலும், அதிகளவில் இருக்கும் அதிர்வை குறைக்கும் வகையில், செயின் மாற்றம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, அதிக அளவு கணமான எடையைக் கொண்டுள்ள பார்-எண்ட் வெயிட்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையானது முழுக்க அப்பாச்சியின் ஆர்ஆர்310 வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளர்களை அழைக்கும் பணியில் டிவிஎஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று, ஆர்ஆர்310 பைக்கை சர்வீஸ் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆடோமேடிக்காவே இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

இலவச அப்கிரேட் சேவையை அறிவித்த டிவிஎஸ்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்...!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் பலர், பைக் அதிகளவு வைப்ரேட் ஆகிறது என தொடர்ச்சியாக கொடுத்த புகாரையடுத்து டிவிஎஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த இலவச சேவையை வாடிக்கையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Article Published On: Tuesday, March 12, 2019, 17:54 [IST]
English summary
TVS Offers Free Upgrade Service For Apache RR310. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+