25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் 25ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

பெண்களுக்கான சிறந்த இருசக்கர வாகனமாக டிவிஎஸ் ஸ்கூட்டி விளங்குகிறது. அடக்கமான வடிவமைப்பு, எளிதாக கையாளக்கூடிய எடை, போதுமான செயல்திறன் கொண்ட எஞ்சின் ஆகியவற்றுடன் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைப்பதால் டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டிவிஎஸ் ஸ்கூட்டியானது பெப் ப்ளஸ் மற்றும் ஸெஸ்ட் 110 ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக சரியான தேர்வு என்று மார்க்கெட்டில் எந்த ஸ்கூட்டரையும் கூற முடியாது. அந்த அளவுக்கு பெண்கள் ஓட்டுவதற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

இந்த நிலையில், டிவிஎஸ் ஸ்கூட்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

வடிவமைப்பு, எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால், இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரேவிங் ரெட் மற்றும் க்ளிட்டரிங் கோல்டு ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். அத்துடன், இந்த மாடலில் 25ம் ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் லோகோ பொருத்தப்பட்டு இருக்கும்.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, இரண்டு சக்கரங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படும் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை எஸ்பிடி பிரேக்கிங் சிஸ்டம் என்று டிவிஎஸ் குறிப்பிடுகிறது.

25ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகம்!

புதிய பாடி டீக்கெல்கள் மற்றும் எஸ்பிடி பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு ரூ.42,397 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்ப்டடு இருக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடலாகவும் கூறலாம்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ்
English summary
TVS Scooty Gets Two New Colour Options TO Celebrate 25 Years In India.
Story first published: Friday, April 12, 2019, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X