டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரில் புதிய மேட் எடிசன் மாடல் அறிமுகம்!
கவர்ச்சிகரமான புதிய வண்ணத் தேர்வுகளில் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டிவிஎஸ் ஸ்கூட்டி அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் இரண்டு புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கோரல் மேட் மற்றும் அக்வா மேட் ஆகிய இரண்டு புதிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட வண்ணத் தேர்வுகள் அறிமுமாகி உள்ளன. மேலும், முப்பரிமாண லோகோ, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் கவர்ச்சிகரமாக வந்துள்ளது.

பண்டிகை காலத்தில் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ள பெண் வாடிக்கையாளர்களை இந்த புதிய வண்ணத் தேர்வுகளுடன் கூடிய ஸ்கூட்டி பெப் ப்ளஸ் கவரும் என்பதுடன், தனித்துவமான தேர்வாகவும் அமையும்.

வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 87.8 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 4.9 பிஎஸ் பவரையும், 5.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரின் ஈக்கோத்ரஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனம், நீடித்த உழைப்பையும் வழங்கும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர், சைடு ஸ்டான்டு அலாரம், பகல்நேர விளக்குகள், ஓபன் க்ளவ் பாக்ஸ், பெண்கள் எளிதாக சென்டர் ஸ்டான்டு போடுவதற்கான காப்புரிமை பெற்ற விசேஷ தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் இருக்கும் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் சிறப்பான பயண அனுபவத்தையும், கையாளுமையையும் வழங்கும்.

புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிசன் மாடலில் வந்துள்ள புதிய வண்ணத் தேர்வுகளுக்கு ரூ.44,322 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 7 வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








