டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் பைக்கின் கார்கில் எடிசன் மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவின் முப்படைகளை நினைவூட்டும் விதத்தில், நேவல் ஒயிட், சோல்ஜர் க்ரீன் மற்றும் ஃப்ளையிங் புளூ ஆகிய வ

கார்கில் போரில் பங்கேற்ற முப்படைகளின் பங்களிப்பை போற்றும் விதத்தில், டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் பைக்கின் கார்கில் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் பைக்கின் கார்கில் எடிசன் மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவின் முப்படைகளை நினைவூட்டும் விதத்தில், நேவல் ஒயிட், சோல்ஜர் க்ரீன் மற்றும் ஃப்ளையிங் புளூ ஆகிய விசேஷ வண்ணங்களில் வந்துள்ளது.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

நேவல் ஒயிட் வண்ணமானது இந்திய கடற்படையையும், பச்சை - வெள்ளை கலவையானது ராணுவத்தையும், ஃப்ளையிங் புளூ வான்படையையும் பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது. இதில், பச்சை மற்றும் வெள்ளை வண்ணக் கலவையானது ராணுவ பைக் போன்ற தோற்றத்தை பெற்றிருப்பது எல்லோரின் கவனத்தையும் உனடியாக ஈர்க்கும்.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

இந்த பைக்கில் கார்கில் சின்னமும் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. இது பைக்கை வாங்குவோருக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக பார்க்க முடியும்.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

கார்கில் போரில் பங்கேற்ற முப்படையினரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் விதத்தில், கடந்த ஆண்டு ஜூலை 26ந் தேதி கார்கில் போர் வெற்றி தினத்தன்று "Kargil Calling - Ride for the Real Stars" என்ற பெயரில் சிறப்பு வாகன அணிவகுப்பை டிவிஎஸ் மோட்டார்ஸ் நடத்தியது.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள 3,500 டிவிஎஸ் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களிலிருந்து இந்த பைக் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது கார்கில் போரில் பங்கேற்ற முப்படையினரின் பங்களிப்பை போற்றும விதத்தில் ஸ்டார்சிட்டி ப்ளஸ் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் எஸ்பிடி எனப்படும் ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டம் கொண்ட பைக் மாடலின் அடிப்படையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் வந்துள்ளது. வர்ணக் கலவை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இல்லை.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் 109.7 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் அறிமுகம்!

ரூ.54,399 எக்ஸஷோரூம் விலையில் டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ் கார்கில் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட டிவிஎஸ் டீலர்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 14, 2019, 10:27 [IST]
English summary
TVS Motor Company has launched the Star City+ in a special 'Kargil Edition' in India. The TVS Star City+ Kargil Edition is priced at Rs 54,399, ex-showroom (Delhi). The special edition model, remains completely unchanged from the standard variant, apart from the cosmetic changes.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+