டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனத்தின் மிக பிரபலமான பைக் 110 சிசி பைக் மாடல் ஸ்டார் சிட்டி ப்ளஸ். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி தனித்துவமான அம்சங்களுடன் சிறப்பு பதிப்பு மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் சிறப்பு பதிப்பு மாடலானது கருப்பு - வெள்ளை வண்ணக் கலவையில் வந்துள்ளது. இதன்மூலமாக,சாதாரண ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிலிருந்தது வேறுபடுவதுடன், புதிய ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் கவர்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த சிறப்பு பதிப்பு பைக் இரட்டை வண்ணத் தேர்வில் கிடைப்பதுடன், இருக்கையும் இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, சைடு மிரர்களும் இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது இதன் கவர்ச்சியை கூட்டுகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த பைக்கின் பின்புற சைடு பேனல்களில் சிவப்பு வண்ணக் கலவையும் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் அதில் ஸ்பெஷல் எடிசன் லோகோவும் இடம்பெற்றிருக்கிறது. ஷாக் அப்சார்பரிலும் கூட லோகோ கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் தொடர்ந்து ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் வசதி, தேன்கூடு வடிவிலான டிசைன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர்கள், அலுமினியம் கிராப் ரெயில்கள், கருப்பு வண்ண அலாய் வீல்கள், முப்பரிமாண டிவிஎஸ் லோகோ ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் 110 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் 110 மிமீ டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. 17 அங்குல டயர்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.53,437 எக்ஸ்ஷோரூம் (கர்நாடகா) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பட்ஜெட் பைக் வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2019, 17:32 [IST]
English summary
TVS Motors has launched the StarCity+ 'Special Edition' model in the Indian market. The new 2019 TVS StarCity+ Special Edition is priced at Rs 53,437, ex-showroom (Karnataka) and is part of the company's festive season offering.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+