விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை களமிறக்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

இந்த நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களை மிக விரைவில் சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் நிறுவனம் பங்கேற்கவில்லை.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

எனவே, முன்னதாகவே தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களை இந்த மாதம் முதல் வரிசையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டு துவக்கமான ஜனவரி முதல் பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு அனுப்புவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், சில புதிய மாடல்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாடல்கள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மாடல்களில் ஸ்டைலிங்கிலும் சிறிய வித்தியாசங்களுடன் வர இருக்கிறது. அதன்படி பார்த்தால், அப்பாச்சி ஆர்டிஆர் 160, வீகோ ஆகிய மாடல்கள் விரைவில் அறிமுகமாகும் என்றஉ தெரிகிறது.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

அதேபோன்று, அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் என்டார்க் 125 ஆகிய மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புளூடூத் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தங்க வண்ணத்திலான ரேஸிங் செயின் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

விரைவில் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குகிறது டிவிஎஸ்!

குறைவான மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் எஞ்சின் திறனில் சிறிய மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 4, 2019, 11:44 [IST]
English summary
TVS Motors is gearing to introduce BS-6 emission standard two wheeles in India from this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+