முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாக இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

கடந்த ஆண்டு எக்ஸ்போவில் டிவிஎஸ் நிறுவனம் க்ரியான் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக ஸ்டைலாக இருந்ததுடன், டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலாக வரும் என்ற தகவலால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டு இறுதியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது. அதாவது, க்ரியான் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வர இருக்கிறது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

புதிய டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் மூன்று லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 0 - 100 கிமீ வேகத்தை வறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

மேலும், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று டிவிஎஸ் தெரிவித்திருந்தது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டிவிஎஸ் க்ரியான் கான்செப்ட் மாடலில் டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த ஸ்கூட்டரின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடலிலும் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் தக்க வைக்கப்படும் என்று தெரிகிறது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

புதிய டிவிஎஸ் க்ரியான் மூலமாக எலெக்ட்ரிக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான திட்டங்களை டிவிஎஸ் வகுத்துள்ளது. போட்டியாளர்களைவிட மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கும்.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

இதுதவிர, நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் அனைத்து இருசக்கர வாகன மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் அறிமுக விபரம் வெளியானது!

மேலும், நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டு வாகன நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த காலகட்டமாகவும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் வரும் இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயரும் வாய்ப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2019, 11:14 [IST]
English summary
TVS Motors has confirmed that the first electric vehicle should arrive during the current financial year.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+