டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 300சிசி பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியில் 300சிசி பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கூட்டணியில் உருவான 300சிசி பைக்குகள் இரண்டு பிராண்டுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கும், பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310 மற்றும் ஜி 310எஸ் பைக் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

இந்த நிலையில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் அடிப்படையிலான புதிய பைக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய மாடல் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் போன்று நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக மாடலாகவோ அல்லது ஜி 310 எஸ் பைக் போன்று சாகச ரக பைக் மாடலாகவோ இருக்கலாம் என்று ஆட்டோகார் புரோ தளம் தெரிவிக்கிறது.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

எனினும், அட்வென்ச்சர் எனப்படும் சாகச ரக மாடலாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய பைக் மாடல் வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

டிவிஎஸ் அப்பாச்சி 310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக் மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த புதிய டிவிஎஸ் மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். புதிய மாடலின் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

மேலும், அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் பயன்படுத்ததப்படும் அதே முக்கிய பாகங்கள்தான் இந்த புதிய மாடலிலும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. இந்த பைக்கில் புளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கும்.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

அதேபோன்று, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இது ரோட்ஸ்டெர் மாடலாக இருந்தால் கேடிஎம் ட்யூக் 390 மாடலுக்கு போட்டியை கொடுக்கும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ரூ.2.24 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய டிவிஎஸ் பைக் இதனை ஒட்டிய விலையிலேயே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் புதிய 300சிசி பைக்!!

இதுதவிர்த்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட மொபட் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ரகத்தில் தொடர்ந்து வர்த்தக வாய்ப்புள்ளதால், மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய மாடல்கள் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2019, 11:02 [IST]
English summary
TVS motors is planning to launch new 300cc bike model in India soon.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+