புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

செயல்திறன் மிக்க க்ரூஸர் பைக்குகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஸெப்லின் என்ற க்ரூஸர் பைக் கான்செப்ட்டை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

டிவிஎஸ் ஸெப்லின் கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அசத்தலான இதன் தொழில்நுட்ப அம்சங்களும் பைக் பிரியர்கள் மத்தியில் பெரிய ஆவலை உண்டு பண்ணியது. இந்த நிலையில், காட்சிக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இந்த பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் குறித்த பேச்சு அடிபட துவங்கியுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

அதன்படி, இந்த ஸெப்லின் பைக் நிச்சயமாக தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஸெப்லின் பைக்கின் தயாரிப்பு நிலை மாடலானது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

இந்த பைக்கில் 220 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 18.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைககில் பயன்படுத்தப்படும் 200 சிசி எஞ்சின் ரீ-போர் செய்யப்பட்டு இந்த பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கிறது. எனினும், இந்த பைக் குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

இதில், ஹைப்ரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. சாதாரண வகை ஃபோர்க்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போனறவற்றை கொடுத்து முடிந்தவரை விலையை குறைவாக நிர்ணயிக்கும் முடிவில் டிவிஎஸ் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்!

பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இது நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை ஒரு புரோட்டோடைப் மாடல் கூட சாலை சோதனைகளில் வைக்கப்படுவது குறித்த தகவல்கள் இல்லை என்பதுதான் தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2019, 12:16 [IST]
English summary
According to media sources, the TVS Zeppelin cruiser bike concept to be unveiled in its production form at the 2020 Auto Expo.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+