முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் கலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

ஊபர் நிறுவனம் ஓர் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் புதிய நுகர்வர்களாக வரவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று ரைட்களை முற்றிலும் இலவசமாக வழங்க இருக்கின்றது அந்த நிறுவனம். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கால் டாக்ஸி சேவையில் கொடிகட்டி பறந்து வரும் ஊபர் நிறுவனம், பெங்களூருவை பசுமை நகரமாக மாற்ற புது முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மோட்டாராய்ட்ஸ் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

ஊபர் நிறுவனம், டெக்னாலஜி டிரைவன் மொபிலிட்டி நிறுவனமான யூலு உடன் இணைந்து, இ-பைக்கை வாடகை விட திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை அந்த நிறுவனம், முதலில் பெங்களூருவில் தொடங்க இருக்கின்றது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் ஏற்கனவே கையொப்பம் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

யூலு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் இந்த இ-பைக்குகள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை. ஆகையால், இந்த இ-பைக்கை இயக்க டிரைவிங் லைசென்சஸ் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த சிறப்பான இ-பைக்கைதான் ஊபர் நிறுவனம் வாடகைக்கு விட இருக்கின்றது.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

முதல்கட்டமாக, பெங்களூருவில் வாடகைக்கு களமிறக்கப்பட இருக்கும் இந்த பைக்குகள், அந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த இ-பைக்குகள் ஈகோ-ஃபெரண்ட்லி வாகனம் என்பதால், சுற்றுப்புழலுக்கும் நண்பனாக இருக்கும். இதனால், அந்நகரத்தின் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதும் கணிசமாக தவிர்க்கப்படும்.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

அதேபோன்று, இதன் வருகையானது முக்கியமாக, பெங்களூரு நகரத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சில முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால், இந்த இ-பைக்குகள் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அலுவலகம் செல்பவர்களுக்கு, பெரும் பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

யூலு நிறுவனத்தின் இந்த இ-பைக்குகளை ஊபர் நிறுவனத்தின் ஆப் மூலம் வாடகைக்கு புக் செய்து கொள்ள முடிம். இதற்காக பிரத்யேகமாக ஆப் ஒன்றை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும், இந்த ஆப்பினை, ஆப்பிள் ஐஓஎஸ் பிளே ஸ்டோர் அல்லது ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

தரவிறக்கம் செய்யப்பட்ட இந்த ஆப்பில் கேட்கப்படும் சில தகவல்களை உள்ளிட்ட பின்னர், உங்களுக்கான அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகிவிடும். இதன் பின்னர், உங்கள் ஆப்பினை பயன்படுத்தி யூலூவின் இந்த இ-பைக்கை எளிதில் புக் செய்து கொள்ளலாம்.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

மேலும், நீங்கள் புக் செய்ததற்கான அத்தாட்சியாக க்யூஆர் கோட் உங்களது ஸ்மார்ட்போனின் திரையில் டிஸ்பிளோயாகும். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஊபர் - யூலு இ-பைக் மையத்திற்கு சென்று, உங்களுக்கான இ-பைக்கை வாடகை முறையில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வாடகை தொகை மற்ற வாடகைப் பைக்காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

இத்துடன், ஊபர் துவங்கியுள்ள இந்த சேவையை முதல் முறையாக அணுகும் வாடிக்கையாளர்களுக்கு, முதல் மூன்று ரைட்களை இலவசமாக வழங்க இருக்கின்றது.

ஊபரின் இந்த அதிரடி அறிவிப்பால், அதன் போட்டி நிறுவனங்களான வோகோ, ரோபிடோ உள்ளிட்ட வாடகை பைக் நிறுவனங்கள் களக்கத்தில் ஆழ்ந்துள்ளது என்றே கூறலாம்.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வாகனங்களால், பல்வேறு பிரச்னைகள் பூதகரமாக வெடிக்க துவங்கியுள்ளன. அந்தவகையில், சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு உள்பட பல்வேறு பிரச்னைகள் தலைவிறித்து ஆடத் தொடங்கியுள்ளன. இதில் முக்கியமாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள்தான் இதுபோன்று பிரச்னைகளில் சிக்கி சின்னா பின்னமாகி வருகின்றன.

முதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் களங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...!

சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள இந்த அதோகதியை தீர்க்கும் வகையில் ஊபர் கொண்டு வந்திருக்கும் ஈகோ ப்ரெண்ட்லி இ-பைக் வாடகைத் திட்டம், சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பநிலை முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Uber And Yulu Offer Eco-friendly Commuting In Bangalore — Will We See The Garden City Again?. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X