இந்தியாவில் புதிய 150சிசி ஸ்கூட்டரை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!
அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. சரியான விலையில் சிறந்த மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், Chill 150 என்ற புதிய ஸ
இந்தியாவில் புத்தம் புதிய 150சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. சரியான விலையில் சிறந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், தனது வர்த்தகத்தை வலுவாக்கிக் கொள்வதற்காக ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தனது Chill 150 என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய 150சிசி ரக ஸ்கூட்டர் வெஸ்பா 150 ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டரானது வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள், அகலமான இருக்ககை அமைப்பு, கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்ட சக்கரங்கள் உள்ளிட்டவற்றுடன் பழமையை போற்றும் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கும்.

அதேநேரத்தில், நவீன யுகத்திற்கு தக்கவாறு ஏராளமான வசதிகளை அளிக்கும். குறிப்பாக, தற்போது இளைய தலைமுறை அத்தியாவசியமாக கருதும், புளுடூத் இமைப்பு வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும் வழங்கப்பட்டிருக்கும்.

புதிய யுஎம் சில் 150 ஸ்கூட்டரில் ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் தவிர்த்து, யுஎம் நிறுவனம் புதிய 200சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடலும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை பெற்றிருக்கும்.

யுஎம் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் இரட்டை சிலிண்டர் எஞ்சின்தான் இந்த புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது மிக முக்கிய அம்சம்.

வெளிநாடுகளில் யுஎம் நிறுவனம் 125சிசி மாடலையும் விற்பனை செய்து வருகிறது. 150சிசி ரக ஸ்கூட்டர் வெற்றி பெற்றுவிட்டால் 125சிசி மாடலையும் அந்நிறுவனம் களமிறக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
Source: Bikewale


Click it and Unblock the Notifications








