இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்தியாவில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவதற்கு யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் க்ரூஸர் ரக பைக்குகள் தயாரிப்பில் பிரபலமானது. கடந்த 2014ம் ஆண்டு லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் கூட்டணியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்த கூட்டணியின் சார்பில் பல்வேறு க்ரூஸர் பைக் மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, விலை குறைவாக யுஎம் பைக்குகள் நிலைநிறுத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

ஆனாலும், இந்திய வாடிக்கையாளர்களை யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அவ்வளவாக கவரவில்லை. இந்த நிலையில், யுஎம் - லோஹியா கூட்டணி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்துவது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், யுஎம் பைக்குகள் மேம்படுத்தி அறிமுகம் செய்யப்படவில்லை. இதற்கு நிதி நெருக்கடியே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்தியாவில் யுஎம் நிறுவனம் தனியாக வர்த்தகத்தை உயிர்ப்பிக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இந்திய வர்த்தகத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவதற்கு யுஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

மேலும், யுஎம் நிறுவனத்தின் டீலர்கள் பல்வேறு இடங்களில் மூடப்பட்டு வருகின்றன. இதுவும், இந்தியாவிலிருந்து யுஎம் நிறுவனம் முற்றிலுமாக வெளியேற இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

கடந்த மார்ச் மாதம் 12 பைக்குகளை மட்டுமே விற்பனைக்காக டீலருக்கு அனுப்பியிருக்கிறது யுஎம் நிறுவனம். அதன்பிறகு ஒரு பைக்கை கூட உற்பத்தி செய்து அனுப்பவில்லை. அதாவது, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர், முற்றிலுமாக வர்த்தகம் முடங்கியது.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்தியாவில் ரெனிகேட் வரிசையில் கமாண்டோ, ஸ்போர்ட் எஸ், மொஜாவே, க்ளாசிக் ஆகியவை விற்பனையில் இருக்கின்றன. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கூட மிகவும் தீவிரமாக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. ஆனால், திடீரென இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் அந்நிறுவனத்திடம் இல்லாமல் போயுள்ளது.

இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்த நிலையில், இதுவரை யுஎம் மோட்டார்சைக்கிள்களை வாங்கிய இந்திய வாடிக்கையாளர்கள் யுஎம் நிறுவனத்தின் முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், தங்களது பைக்கிற்கான மறுவிற்பனை மதிப்பும் தடாலடியாக குறையும் என்று கவலையடைந்துள்ளனர்.

Most Read Articles
English summary
According to reports, American cruiser bike maker UM Motorcycles is planning to shut operations in India.
Story first published: Saturday, October 12, 2019, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X