13 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கூட்டர் தயாரிப்பில் பஜாஜ்: மாடல் வரைபடம் வெளியானது!
பஜாஜ் நிறுவனம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும்நிலையில், அந்த ஸ்கூட்டரின் வரைபடம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த 1972ம் ஆண்டு செடாக் என்னும் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரின் புரடெக்ஷனானது 2006ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இந்த ஸ்கூட்டர் 2002ம் ஆண்டுக்கு முன்பு வரை 145சிசியில் இரண்டு ஸ்டிரோக்கிலும், அதன் பின்னர் நான்கு ஸ்ட்ரோக்கிலும் கிடைத்தது. இது அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 90 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த ஸ்கூட்டரில் 7.5BHPயும் 5,500rpm பவரும் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது 10.8Nm டார்க்யூவையும், 3,500rpm திறனையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.

ஹமாரா பஜாஜ் என்ற வாசகத்துடன் அறிமுகமான செடாக் ஸ்கூட்டர் அப்போதைய யெஸ்டி, புல்லட் மற்றும் ஜாவா போன்ற ஆதிக்கத்தின் மத்தியிலும் அதிகமாக விற்பனையாகி சாதனைப் படைத்தது. அதே நேரத்தில் செடாக மாடலை வாங்க சில வருடங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கி உள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் அர்பனைட் எனப்படும் பேட்டரி ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக கூறப்பட்டது. தற்போது, அந்த ஸ்கூட்டரின் மாடல் வரைபடத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரை பஜாஜ், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், இந்த மாடலில் பேட்டரி மற்றும் பெட்ரோல் ரகத்திலும் தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, அர்பனைட் பிராண்டில் மேலும் பல தயாரிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அர்பனைட் மாடலின் பவர், டார்க்யூ உள்ளிட்ட மற்ற விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அர்பனைட் மாடலின் வரைபடம் மட்டும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரத்யேகமாக பாரம்பரியம் மற்றும் நவீன லுக்கைக் கொண்டுள்ள அர்பனைட் மாடல் பழைய செடாக் ஸ்கூட்டரின் தோற்றத்தை உள்வாங்கி உருவாக்கப்ட்டு வருவதைப்போல் அந்த ஸ்கெட்ச் தோற்றமளிக்கிறது. இந்த ரம்மியமான தோற்றம் தற்போதே பார்ப்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









