ஹெல்மெட் அணிந்தாலும் மடக்கும் போலீஸார்: எதற்காக தெரியுமா...?

ஹெல்மெட் அணிந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் போலீஸார் மடக்கிப் பிடித்து ரூ. 1,000-த்திற்கான அபராதத் தொகையை வழங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் 63 விதிகளில் மாற்றம் கொண்டு கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

ஆனால், நீண்ட எதிர்ப்பிற்கு பின் தற்போதுதான் அமலுக்கு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க, இந்திய சாலைகளில் அரங்கேறிவரும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதனால் அதிகரித்து வரும் விபத்துகளைக் குறைக்கும் விதமாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இந்த புதிய விதி, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்க உதவுகின்றது.

இது, இந்தியாவை போக்குவரத்து விதிமீறலே இல்லாத நாடாக மாற்றும் என்ற நோக்கில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இந்த நிலையில், அந்தந்த மாநில போக்குவரத்து போலீஸார், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை குறி வைத்து அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இதில், முக்கியமாக ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள்மீதே அவர்களின் பார்வை இருக்கின்றது. அதேசமயம், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸார், ரூ. 1,000த்திற்கான அபராத செல்லாணை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இருசக்கர வாகன விபத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு, ஹெல்மெட் அணியாமல் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

ஆகையால், இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து சட்டம் கூறுகின்றது.

அதேசமயம், இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் ஹெல்மெட்டுகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகின்றது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

ஹெல்மெட்டின் தரம் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஐஎஸ்ஐ முத்திரையை வைத்தே உறுதிச் செய்யப்படுகின்றது. ஆகையால், ஐஎஸ்ஐ முத்திரைப் இல்லாத ஹெல்மெட்டுகளைப் பயன்படத்தும், வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணியாத சென்றதற்கு இணையாக கருதப்படுகின்றனர்.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இத்தகைய ஓர் நடவடிக்கையைதான் பெங்களூரு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், ஐஎஸ்ஐ இல்லாத ஹெல்மெட்டுகள் எளிதில் உடைந்துவிடும். மேலும், இதை அணிந்து செல்வோர் விபத்தைச் சந்திக்கும்போது, பெரியளவில் பலனளிக்காது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிந்து செல்வோரும் புதிய அபராத விதியின்கீழ் தண்டிக்கப்படுகின்றனர்.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இது பெங்களூரு மட்டுமின்றி, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் பயணித்தின்போது, போலீஸாரின் இந்த நடவடிக்கையில் இருந்த தப்பிக்க ஐஎஸ்ஐ முத்திரைப் பொதித்த தலைக் கவசங்களை அணிவதே சிறந்ததாகும்.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

ஐஎஸ்ஐ குறிக்கப்பட்ட தலைக்கவசங்கள் ஏன் கட்டாயமாக்கப்படுகின்றன என்று கேள்வி உங்கள் மத்தியில் எழும்பலாம். ஆகையால், அது எந்த அளவிற்கு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது என்பதனை இதில் பார்க்கலாம்.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) ஸ்டாண்டர்டு IS-451 என்ற பரிசோதனையில் முழுமையாக தேர்ச்சி பெற்ற ஹெல்மெட்டுகளுக்கு மட்டுமே ஐஎஸ்ஐ சான்று வழங்குகின்றது. இந்த பரிசோதனையில் பல்வேறு தரநிலைகளுக்கு ஹெல்மெட்டுகள் உட்படுத்தப்படுகின்றன. இது, விபத்தின்போது ஓட்டுநருக்கு எந்த பாதுகாப்பை வழங்காது என்பதை உறுதி செய்கின்றது. இந்த தரநிலை ஐரோப்பிய ECE 22.05-க்கு ஒத்திருக்கின்றது. மேலும், அனைத்து நிலைகளுக்கும் இது சிறந்ததாக கருதப்படுகிறது.

ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி!

ஆனால், இந்த தரத்தை சாலையோரத்தில் விற்பனைச் செய்யப்படும் சாதாரண ஹெல்மெட்டுகள் நமக்கு வழங்காது. விலை மலிவாக இருப்பதால் வாங்கக்கூடிய இப்பொருளால் நமக்கு எந்த பலனும் இல்லை. அதேசமயம், அது விபத்தின்போது எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஹெல்மெட் தரம் பார்த்து வாங்குவது மிக அவசியம். ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமான தருணமாக உள்ளது. இந்த நிலையில், ஹெல்மெட் குறித்த நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

01. ஹெல்மெட்

விபத்தில் சிக்கும்போது தலையில் ஏற்படும் காயங்கள்தான் உயிரை எடுக்கும் விஷயமாக அமைகிறது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது தலையில் அதிகம் காயம் ஏற்படும் ஆபத்தை இந்த ஹெல்மெட் குறைக்கிறது அல்லது போக்குகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் குறைப்பதாக தெரிவிக்கிறது.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

02. ஹெல்மெட் பிறந்த கதை

ஹெல்மெட் வரலாறு சரியாக ஒரு நூற்றாண்டை கடந்து விட்டது. கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் வேகமாக செல்லும்போது வீரர்கள் பலர் கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக இருந்தது. அப்படி அடிபடும் வீரர்களில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. இதனை டாக்டர் எரிக் கார்னர் என்ற மருத்துவர் கவனித்து வந்ததுடன், இதற்கு தீர்வு காண்பதற்காக, தலைக்கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மோஸ் என்ற டிசைனரை அணுகி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த கவசமானது தலையில் அடிபடாதவாறு உறுதியாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் தலைக்கு அதிக உறுத்தல் இல்லாமல் இலகு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

03. புறந்தள்ளிய வீரர்கள்

எந்த கண்டுபிடிப்பும் முதல்முறை தோல்வி கண்டது சரித்திரம் கண்ட உண்மை. அதே கதிதான் டாக்டர் கார்னர் வடிவமைத்த தலைக்கவசத்துக்கும் நேர்ந்தது. டாக்டர் கார்னரின் தலைக்கவசத்தை ஆட்டோ சைக்கிள் யூனியன் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதனை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், தலைக்கவசம் அணிந்து விழுந்து தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பரவலாக ஹெல்மெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன் மகத்துவத்துமும் புரியத்துவங்கியது.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

04. மோட்டார்ஸ்போர்ட்ஸும், ஹெல்மெட்டும்...

1950களில் முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய அளவிலான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் மாடல்கள் அறிமுகமானது. அத்துடன், அனைத்துவிதமான மோட்டார் பந்தயங்களிலும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 1954ல் பெல் நிறுவனம் அதிக உற்பத்தி இலக்கை வைத்து ஹெல்மெட் மாடல்களை வெளியிட்டது.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

05.. விழிப்புணர்வு

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் ஆஃப் அராபியாவின் மரணமும் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார் லாரன்ஸ். மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சில நாட்கள் கோமாவில் இருந்து அவர் மரணத்தை தழுவினார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரிடம் தெரிவிக்கத் துவங்கினார்.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

06. ஹெல்மெட் வகைகள்

ஹெல்மெட் பயன்பாட்டை பொறுத்து பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. முகத்தை முழுவதுமாக மூடி மறைக்கும் அமைப்புடைய ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட், ஆஃப்ரோடு அல்லது மோட்டோகிராஸ் பயன்பாட்டுக்கான ஹெல்மெட், ஃபிளிப் - அப், ஓபன் ஃபேஸ் என பல வகைகள் உள்ளன. இதில், ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும். மோட்டோகிராஸ் ஹெல்மெட்டுகள் சாதாரண பயன்பாட்டுக்கு ஒத்துவராது. ஓபன் ஃபேஸ் ஹெல்மெட் மாடலும் முழுமையான பாதுகாப்பை வழங்காது.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

07. நவீன ஹெல்மெட்டுகள்

தற்போது ஹெல்மெட்டுகள் பல்வேறு மூலப்பொருட்களில் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், கண்ணாடி இழை, கெவ்லர், கார்பன் இழை என பல்வேறு மூலப்பொருட்கள் மற்றும் கலவையில் தயாரிக்கப்படுகின்றன.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

08. பொருத்தமான ஹெல்மெட்

ஹெல்மெட்டுகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அதில், உங்களது தலையின் அளவுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து வாங்குவதும் அவசியம். அப்போதுதான் அதிகபட்ச பாதுகாப்பையும், சவுகரியமான உணர்வையும் பெற முடியும். உங்கள் தலையின் அளவுக்கு சரியான அளவுடைய ஹெல்மெட்டை தேர்வு செய்வதற்கு உதவும் வகையில், படத்தில் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

09. ஹெல்மெட்டுக்கான தர நிலை

பல்வேறு நாடுகளில் ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நம் நாட்டில் Bureau of Indian Standards (BIS) அமைப்பு ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த வழிகாட்டு முறைகளை வகுத்துள்ளது. ஆனால், இங்கு விற்கப்படும் பல ஹெல்மெட் மாடல்கள் இந்த தர நிலைகளுக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவில் DOT மற்றும் ECE தர நிலைகளுடைய ஹெல்மெட்டுகளை பார்த்து வாங்குவது உத்தமமானது.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

10. ஹெல்மெட் ஆயுள்

பொதுவாக ஹெல்மெட்டுகளை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒருமுறை கீழே விழுந்துவிட்டால், ஹெல்மெட்டின் தர நிலை பாதிக்கப்படும். எனவே, வேறு ஹெல்மெட்டை மாற்றிவிடுவது அவசியம்.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

12. ஹெல்மெட் பிராண்டுகள்

இந்தியாவில் ஸ்டட்ஸ், வேகா மற்றும் எல்எஸ்2 ஆகியவை பட்ஜெட் விலையில் நல்ல ஹெல்மெட்டுகளை வழங்குகின்றன. அராய், ஷூய், பெல் மற்றும் ஏஜிவி ஆகியவையும் சிறந்த ஹெல்மெட் பிராண்டுகளாக கூறலாம்.

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

13. கவனிக்க...

DOT மற்றும் ECE போன்ற சிறப்பான தர நிலையுடைய ஹெல்மெட்டுகளை வாங்கினாலும், அதிலுள்ள பெல்ட்டை போடாமல் சென்றால், உரிய நேரத்தில் சரியான பாதுகாப்பை வழங்காது. எனவே, எப்போதுமே ஹெல்மெட் அணிந்தவுடன் பெல்ட்டை போட்டுச் செல்வது அவசியம் என்பதை மனதில் கொள்க. தலைக்கவசம் உங்கள் உயிர்காக்கும் கவசம் என்பதை மறவாதீர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2019, 12:44 [IST]
English summary
Using Non ISI Helmets Is Punishable. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+