வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

பைக் கஸ்டமைஸ் செய்வதில் பிரபலமான வர்தேஞ்சி நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

பைக் கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று வர்தேஞ்சி. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை உருமாற்றி, புதிய வடிவில் மாற்றிக் காட்டுவதில் கைதேர்ந்த நிறுவனம். ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளது.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது. வர்தேஞ்சி லைஃப் ஸ்டைல் கராஜ் என்ற பெயரில் திறக்கப்பட்டு இருக்கும் இந்த ஷோரூமில் கஸ்டமைஸ் பைக்குகள் மற்றும் பைக்குகளுக்கான விசேஷ ஆக்சஸெரீகளை விற்பனை செய்யும் நிலையமாகவும் செயல்படும். கஸ்டமைஸ் பைக்குகளும் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

சுமார் 1,000 சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் இந்த விற்பனையகத்தில் பைக்குகளை கஸ்டமைஸ் செய்து தருவதற்கான முன்பதிவு மட்டுமின்றி, சர்வீஸ் செய்யும் வசதியும் இருக்கிறது. மேலும், கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளை மோட்டார்சைக்கிள்களில் பொருத்தி தருவதற்கான ஒர்க்ஷாப்பும் இதிலேயே செயல்படுகிறது.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

மொத்தத்தில் மோட்டார்சைக்கிள்களுக்கான அனைத்து விதமான கஸ்டமைஸ் பணிகள் மற்றும் ஆக்சஸெரீகளை இந்த ஷோரூம் மூலமாக வாடிக்கையாளர்கள் பெறலாம். பைக்குகளுக்கு தனித்துவமான ஆக்சஸெரீகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க விரும்புவர்களுக்கு இந்த ஷோரூம் சரியான இடமாக அமையும்.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

ராயல் என்ஃபீல்டு மட்டுமின்றி, கேடிஎம், பஜாஜ் டோமினார் மற்றும் பஜாஜ் அவென்ஜர் பைக்குகளுக்கான விசேஷ ஆக்சஸெரீகள் இந்த ஷோரூமில் விற்பனைக்கு உள்ளது. மேலும், ரைடர்களுக்கான ஜாக்கெட் மற்றும் விசேஷ உடைகளும் இங்கு கிடைக்கும்.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

ஹெல்மெட்டுகள், விசேஷ ஹெட்லைட்டுகள், இருக்கை கவர்கள், டீ- ஷர்ட்டுகள், காலணிகள் என பைக் ரைடர்களுக்கான ஏ டு இசட் ஷோரூமாக இது இருக்கும் என்று வர்தேஞ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஷோரூம் மும்பையில் திறப்பு!

நாடுமுழுவதும் இதுபோன்று 100 புதிய ஷோரூம்களை திறப்பதற்கும் வர்தேஞ்சி திட்டமிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட வர்தேஞ்சி நிறுவனம் இனி பிரான்சிஸ் அடிப்படையில் ஷோரூம்களை திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Article Published On: Thursday, April 4, 2019, 9:54 [IST]
English summary
Custom motorcycle builder, Vardenchi has inaugurated their first lifestyle garage in Mumbai. The new Vardenchi Lifestyle Garage is spread over 1000 sq.ft and offers a range of products, all related to motorcycling.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+