வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டரின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

இத்தாலியன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ, வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய பிராண்டுகளில் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

இந்நிலையில், இந்த நிறுவனம் அதன் வெஸ்பா வரிசையை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக, வெஸ்பா எல்எக்ஸ்125 வேரியண்டின் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலான அர்பன் கிளப் 125 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த புதிய ஸ்கூட்டர் குறித்த அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில், அதன் விலையும் தோராயமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த புதிய மாடலின் விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சில தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை பைக்வேல் எனும் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

அந்தவகையில், புதிதாக களமிறங்க இருக்கும் வெஸ்பா அர்பன் கிளப் 125 ஸ்கூட்டர் நான்கு விதமான வண்ணத் தேர்வில் கிடைக்க இருக்கின்றது. சிவப்பு, நீளம், கிரே மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அது உருவாகியுள்ளது. அதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் அழகை மேலும் மெருகேற்றும் விதமாக கண்ணாடி, கிராப் ரெயில், பிரேக் லிவர் மற்றும் வீல்களுக்கு கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த ஸ்கூட்டரின் லுக்கை சற்று எடுப்பாக எடுத்து காட்டுகிறது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

அதேசமயம், புதிய வெஸ்பா அர்பன் கிளப் ஹெட்லைட் மாஸ்க்கிற்கு குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக சிபிஎஸ் பிரேக்கிங் வசதி பின்பக்க வீலில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க வீலில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் 10 இன்ச் அளவிலான வீல்களில் ட்யூப் லெஸ் டயர் இணைக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

வெஸ்பா அர்பன் கிளப் 125 ஸ்கூட்டரில் கார்பரேடட் சர்ன்ஸ் திறனுடைய 125 சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபேன் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இது பிஎஸ்6 தரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் சிவிடி அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

இதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் சிங்கிள் சைடட் ஆர்ம் ஹைட்ராலிக்கும், பின்பக்கத்தில் ஹைட்ராலிக் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் நடைபெற்று வரும்நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் வெஸ்பா அர்பன் கிளப் 125 ஸ்கூட்டர் டெலிவரிக்காக டீலர்களை வந்தடைந்துவிடும் என கூறப்படுகிறது.

வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த புதிய ஸ்கூட்டரின் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 73,733 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர், சுஸுகி நிறுவனத்தின் அக்சஸ்125, டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் ஹோண்டா கிரேசியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும்.

Images are for representation purpose

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 10:17 [IST]
English summary
Vespa 125 Urban Club price revealed. Read In Tamil.
மேலும்... #வெஸ்பா #vespa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+