வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பு!
வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 மதிப்புடைய சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பிரிமீயம் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃப்ர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஃபென்டாபுலஸ் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சிறப்பு சேமிப்புச் சலுகையின் கீழ், வெஸ்பா எஸ்எக்ஸ்எல்125, எஸ்எக்ஸ்எல்150, விஎக்ஸ்எல் 125, விஎக்ஸ்எல்150, எலிகண்ட், அர்பன் க்ளப் ஆகிய ஸ்கூட்டர்களுக்கும், ஏப்ரிலியாவின் எஸ்ஆர்125, எஸ்ஆர்150, எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் ஆகிய மாடல்களுக்கும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

இந்த சேமிப்புச் சலுகையின் கீழ் ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ், 5 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி திட்டம், சாலை அவசர உதவித் திட்டம், முதல் ஆண்டுக்கு லேபர் கட்டணம் இல்லாமல் பராமரிப்பு செய்துகொள்வதற்கான திட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

வெஸ்பா, ஏப்ரிலியாவின் 125 சிசி ஸ்கூட்டர்களுக்கு ரூ.4,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸும், 150 சிசி ஸ்கூட்டர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் இலவசமாகவும் வழங்கப்படுவதாக பியாஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேடிஎம் மூலமாக ரூ.6,000 வரை சேமிப்புச் சலுகைகளையும் பெற முடியும். இந்த புதிய ஆஃபர்கள் மூலமாக பண்டிகை காலத்தில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் வாங்குவோருக்கு அதிக மதிப்பை பெற முடியும் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா டீலர்களை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








