வெஸ்பா பிராண்டில் 200 சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் பியாஜியோ நிறுவனம்!
சக்திவாய்ந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பிராண்டுகளில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதில், வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் பிரிமீயம் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தை விரிவாக்கும் விதத்திலும் சக்திவாய்ந்த 200 சிசி வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு பியாஜியோ திட்டமிட்டடுள்ளது. வெஸ்பா மட்டுமின்றி, ஏப்ரிலியா பிராண்டிலும் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய பியாஜியோ திட்டமிட்டுள்ளது.

வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் 150 முதல் 200 சிசி வரையிலான மாடல்களை அறிமுகம் செய்வதற்கும் பியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, மிகவும் பிரிமீயம் ரகத்தில் இந்த மாடல்கள் நிலைநிறுத்தப்படும்.

மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஒப்பாக தனது ஸ்கூட்டர் மாடல்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்-6 ஸ்கூட்டர் மாடல்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், பிஎஸ்- 6 எஞ்சினுடன் வரும் புதிய மாடல்களில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் பியாஜியோ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் வெஸ்பா பிராண்டில் இந்த புதிய பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்வதற்கு பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 22 கிம்கோ மோட்டார்ஸ் நிறுவனம் 300சிசி மற்றும் 160 சிசி ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் சக்திவாய்ந்த மாடல்களாக இவை இருக்கின்றன. இந்த வரிசையில், தற்போது பியாஜியோவும் தனது வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் சக்திவாய்ந்த மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








