புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!
புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் பிரிமீயம் வேரியண்ட்டாக க்ளப் ரேஞ்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா க்ளஸ் ரேஞ்ச் ஸ்கூட்டர் அஸுரோ புரொவென்ஸா, மேஸ் க்ரே, கிளாஸி யெல்லோ மற்றும் கிளாஸி ரெட் ஆகிய 4 புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும், பிரேக் லிவர், கிராப் ரெயில் கைப்பிடி உள்ளிட்ட பாகங்கள் பளபளப்பான கருப்பு வண்ண ஃபினிஷிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வண்ணங்கள் மற்றும் கருப்பு வண்ண ஃபினிஷிங் மூலமாக ஸ்கூட்டர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்வதற்கான பியாஜியோவின் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, சர்வீஸ் ரிமைன்டர், அவசர காலத்தில் நெருங்கியவர்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்வதற்கான வசதியை அளிக்கும்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய பார்க்கிங் வளாகங்களில் வண்டி இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும். இந்த கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமானது ஜெர்மனியை சேர்ந்த ஹெல்லா நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது.

புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டரில் 125சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.76 கிமீ மைலேஜையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டரில் முன்புறத்தில் சிங்கிள் சைடு ஆர்ம் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 150 மிமீ டிரம் பிரேக்கும், பின்புறத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன.

புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர் ரூ.72,190 புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தனித்துவமான ஸ்கூட்டரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








