நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை! அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வாங்கிடலாமே

பிரபல கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 400 மாடல் பைக்கின் விலையை மிஞ்சும் தொகையில் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

இத்தாலியை மையமாகக் கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், அப்ரில்லா மற்றும் வெஸ்பா பிராண்டுகளில் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்நிறுவனம், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

அந்தவகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் வெஸ்பா பிராண்டின் ஜிடிஎஸ் 300 சூப்பர் டெக் மாடல் ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டர்களைப் போலவே ரெட்ரோ ஸ்டைலில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது கூடுதல் பழமையான ஸ்டைலில் காட்சியளிக்கும் வகையிலான வேலைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றது.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

என்னதான் இது ரெட்ரோ ஸ்டைலில் காணப்பட்டாலும், அதில் காணப்படும் அம்சங்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு இணையானதாக இருக்கின்றது. ஆகையால், வெஸ்பா பிராண்டில் விற்பனையாகும் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இதன் விலை பல மடங்கு அதிகமானதாக உள்ளது.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

அந்தவகையில், தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெஸ்பா ஜிடிஎஸ் 300 ஸ்கூட்டருக்கு அந்நாட்டு மதிப்பில் 480,000 பெஸ்ஸோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 5.6 லட்சம் ஆகும்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

இந்த அதிகபட்ச விலையானது, இந்தியாவில் விற்பனையாகும் கவாஸாகி நிஞ்சா 400 மாடலைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது. இத்தகையை விலையை இந்த ஸ்கூட்டர் பெறுவதற்கு, அதில் பொருத்தப்படும் அதீத திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினும் ஓர் காரணமாகும்.

அந்தவகையில், வெஸ்பா ஜிடிஎஸ் 300 சூப்பர் டெக் ஸ்கூட்டரில் லிக்யூடு கூல்டு 278.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

அந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 23.5 பிஎஸ் பவரையும், 26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான ஸ்கூட்டரை வெஸ்பா அறிமுகம் செய்வது, இதுவே முதல் முறையாகும்.

MOST READ: ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

இதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டர் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பான சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்ற வகையிலான பிரிமியம் வசதிகளைக் கொண்டவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்கூட்டரின் முன்பக்கத்திற்கு லிங்கட் டைப்பிலான சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் இரு ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் ஒரு ஷாப் அப்சார்பரே இடம்பெறும். ஆனால், வெஸ்பாவின் இந்த புத்தம் புதிய ஸ்கூட்டரில் இரு ஷாக் அப்சார்பர்கள் இடம்பெறுகின்றன.

MOST READ: அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

தொடர்ந்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பிரேக்கிங் வசதிக்காக ஸ்கூட்டரின் இரு முனைகளிலும் 220மிமீ அளவுடைய டிஸ்க் பிரேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.

MOST READ: 82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

இதேபோல, நாம் முன்னதாக கூறியதைப் போன்று ஸ்கூட்டரில் காணப்படும் அனைத்து தொழில்நுட்பங்களும் தற்போதைய தலைமுறையினரைக் கவரும் வகையில் இருக்கின்றது. அந்தவகையில், 4.3 இன்சிலான பெரிய கலர்ஃபுல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

உதாரணமாக, பெட்ரோல் அளவு, வேகம் உள்ளிட்ட தகவல்களை வழங்கும். மேலும், ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் ப்ளூடூத் வசதியை பயன்படுத்தவும் இந்த டிஸ்பிளே உதவுகின்றது. இத்துடன், ஸ்கூட்டரின் சில அம்சத்தை செல்போன் மூலம் கட்டுபடுத்துகின்ற வகையில் ஒரு பிரத்யேக ஆப் வழங்கப்பட உள்ளது. இது, ஸ்கூட்டரில் காணப்படும் ப்ளூடூத் மூலம் இணைந்து பணி புரியும்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

மேலும், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் திரை வெளிப்படுத்தும். ஆகையால், வெஸ்பா ஜிடிஎஸ் ஸ்கூட்டரை இயக்கும் வாகன ஓட்டி தன்னுடைய செல்போனுக்கு வரும் முக்கியமான அழைப்பு மற்றும் தகவலை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

தொடர்ந்து, இந்த அறிவிப்புகளை கன்ட்ரோல் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஜாய் ஸ்டிக் கன்ட்ரோலர் இடது பக்கம் உள்ள சுவிட்சுகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மதிப்புக்கூட்டப்பட்ட விஷயமாக குரல் கட்டளையை ஏற்கும் திறனும் இந்த ஸ்கூட்டரிலும் இடம்பெற்றிருக்கின்றது. இது செல்போன் அழைப்புகளை ஏற்க மற்றும் தவிர்ப்பதற்கு உதவும். மேலும், கூடுதல் சில வசதிகளையும் இதன்மூலம் இயக்க முடியும்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

வெஸ்பாவின் இந்த புத்தம் புதிய ஜிடிஎஸ் 300 சூப்பர் டெக் ஸ்கூட்டரின் இந்திய வருகை கேள்விக்குறியாகதான் உள்ளது. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமானால், பல மடங்கு விலையுயர்வைப் பெற்று அறிமுகம் செய்யப்படலாம் என வாகனத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே!!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏற்கனவே வெஸ்பாவின் ஓர் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது. அந்தவகையில், 946 எம்பிரியோ ஆர்மணி எடிசன் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன் விலை ரூ. 12 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa GTS 300 SuperTech Scooter Launched In Philippines. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X