போட்டியைச் சமாளிக்க வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா?
பியாஜியோ நிறுவனம் அதன் வெஸ்பா வரிசையில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இத்தாலியன் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ நிறுவனம், அதன் வெஸ்பா வரிசையை விரிவாக்கம் செய்ய தயராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், வெஸ்பா எல்எக்ஸ்125 வேரியண்டின் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலான அர்பன் கிளப்125 என்ற புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை இந்தியன் ஆட்டோ பிளாக் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

எல்எக்ஸ்125 மாடலில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட டிசைன் மற்றும் புதிய வண்ணங்களைக் கொண்டு, புதிய அர்பன் கிளப் 125 ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டருக்கு மேட் பினிஸிங் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் வீல், கண்ணாடி முன்பக்க பென்டர் கார்னிஷ் உள்ளிட்ட பாகங்களுக்கு கருப்பு வண்ணத்திலான ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹைலைட்டானது, ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் தொடங்கிய பின்பக்க சிவப்பு விளக்கு வரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் குரோம் பூச்சு மற்றும் சில்வர் நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், புதிய வெஸ்பா அர்பன் கிளப் ஹெட்லைட் மாஸ்க்கிற்கு குரோம் பூச்சு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக சிபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வெஸ்பா எல்எக்ஸ் 125 மாடலில் டிரம் பிரேக் வசதி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த அர்பன் கிளப் 125 ஸ்கூட்டரில் கார்பரேடட் சர்ன்ஸ் திறனுடைய 125சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபேன் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 9.76 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. பிஎஸ்6 தரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த எஞ்ஜினில் சிவிடி அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு, முன்பக்கத்தில் சிங்கிள் சைடட் ஆர்ம் ஹைட்ராலிக்கும், பின்பக்கத்தில் ஹைட்ராலிக் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இன்னும் இரண்டு வாரங்களில் விற்பனைக்காக டீலர்களை வந்தடைந்துவிடும் என கூறப்படுகிறது.

இதன் மதிப்பு எக்ஸ்-ஷோரூமில் ரூ. 74,500 ஆக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானால், சுஸுகி நிறுவனத்தின் அக்சஸ்125, டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் ஹோண்டா கிரேசியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும்.

இத்துடன் பியாஜியோ நிறுவனம் அதன் 125சிசி கொண்ட அப்ரில்லா ஸ்டாரம் ஸ்கூட்டரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதன்படி, இந்த ஸ்கூட்டர் இந்த மாதத்தில் விற்பனைக்கு களமிறக்கப்படும். இந்த ஸ்டார்ம் ஸ்கூட்டரில் 12இன்ச் வீல், ஆஃப் ரோடு டயர், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் ரூ. 65 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








