பைக்கில் 150 கிமீ வேகம்... நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

பைக்கில் மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், நூலிழையில் உயிர் தப்பினார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த திக்... திக்... வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பைக்கில் 150 கிமீ வேகம்... நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இந்திய சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் உயிர்களை காவு வாங்கி கொண்டிருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் கருதப்படுகின்றன. இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதத்தை எதிர்கொள்ள நேரிடும்.

பைக்கில் 150 கிமீ வேகம்... நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

இந்த சூழலில் இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று, பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. மேகாலயாவை சேர்ந்த பிஷால் ஷர்மா என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மிகவும் அபாயகரமான இந்திய சாலையில் நேரவிருந்த விபத்தில் இருந்து அவரது நண்பர் டங்கன் ஷர்மா நூலிழையில் தப்பிய திக்... திக்... காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று ஹயோசங் ஜிவி650 (Hyosung GV650) பைக்கை டங்கன் ஷர்மா அதிவேகத்தில் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரளவிற்கு காலியாகதான் இருந்தது. எனவே டங்கன் ஷர்மா மணிக்கு சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை செலுத்தினார். ஆனால் இவ்வளவு வேகத்தில் பயணிப்பது என்பது மிகவும் அபாயகரமானது.

பைக்கில் 150 கிமீ வேகம்... நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

அதுவும் இந்திய சாலைகளில் இவ்வளவு அதிவேகம் நிச்சயம் ஆபத்தானதுதான். இந்த அளவு வேகத்தில் பயணிக்கும்போது, முன்னே செல்லும் வாகனங்களின் வேகத்தை கணிப்பது மிகவும் கடினம். அதீத கவனத்தில் இருந்தால் மட்டுமே வாகனத்தை கட்டுப்படுத்தவும் முடியும்.

இந்த சூழலில் டங்கன் ஷர்மா அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில், ஆடு ஒன்று திடீரென குறுக்கே வந்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதவில்லை. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும்.

டங்கன் ஷர்மா அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் பொருத்தப்பட்டிருந்த கேமராவில், நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்திய சாலைகளில் ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகள் மட்டுமல்ல. திடீர் திடீரென மனிதர்களும் கூட குறுக்கே வந்து விடுவார்கள். எனவே இந்திய சாலைகள் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகள் காலியாக இருக்கிறது என்பதற்காக வாகனங்களை அதிவேகத்தில் இயக்கினால் ஆபத்துதான் மிஞ்சும். அதிவேகத்தில் பயணிக்கும்போது கால்நடை அல்லது மனிதர்கள் யாராவது திடீரென குறுக்கே வந்து விட்டால், வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம். இதனால் விபத்து நேரிடலாம்.

ரியாக்ஸன் டைம் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே நேரம் மிதமான வேகத்தில் ஓட்டினால், வாகனத்தை எளிதாக கட்டுப்படுத்தி விட முடியும். எனவே இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் பயணம் செய்யுங்கள்.

அதேபோல் சாலைகளில் கால்நடைகளை காண நேரிட்டால், உடனடியாக வேகத்தை குறைத்து விடுங்கள். ஏனெனில் கால்நடைகள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அங்கும், இங்கும் ஓடக்கூடும். அப்போது வேகத்தை குறைக்காவிட்டால், வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு வழிவகுத்து விடலாம்.

Source: Shantonil Nag

More from DriveSpark

Article Published On: Wednesday, February 13, 2019, 17:01 [IST]
English summary
What A Miraculous Escape! Hyosung GV650 Bike Rider Narrowly Misses A Goat: Video Goes Viral. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X