Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா?
பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் அனைவருக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளில் நாம் பலமுறை பைக்குகளை பயன்படுத்துகிறோம். பொதுவாக பெட்ரோல் மூலம்தான் பைக்குகள் இயங்குகின்றன. ஆனால் டீசலை காட்டிலும் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். இதனால் டீசலில் இயங்கும் வகையில் பைக்குகள் வடிவமைக்கப்படாதது ஏன்? என்ற சந்தேகம் சில சமயங்களில் நமக்கு எழும்.

பைக்குகள் டீசலில் இயங்கினால் நம்மால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். இருந்தபோதும் பெட்ரோலில் இயங்கும்படிதான் பெரும்பாலும் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. டீசல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 24:1. இது பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோவை விட அதிகம். பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 11:1 மட்டுமே. இந்த அதிகப்படியான கம்ப்ரஷன் ரேஷியோவை கையாள வேண்டுமென்றால், டீசல் இன்ஜின் பெரிதாகவும், ஹெவி மெட்டலாகவும் இருப்பது அவசியம்.

இதன் காரணமாகதான் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின் கனமானதாக இருக்கிறது. அத்துடன் மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு டீசல் இன்ஜின்கள் 'சூட்' ஆகாமல் போவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

2. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ காரணமாக, பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின்கள் அதிக வைப்ரேஷனையும், சத்தத்தையும் உருவாக்கும். மோட்டார்சைக்கிள் போன்ற இலகு ரக வாகனங்களால் இந்த அதிகப்படியான அதிர்வுகளையும், சத்தத்தையும் கையாள்வது என்பது சாத்தியம் இல்லாதது. இதன் காரணமாகவும் பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

3. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ மற்றும் ஹெவி இன்ஜின் காரணமாக, டீசல் இன்ஜின்களின் ஆரம்ப விலையானது பெட்ரோல் இன்ஜினை விட அதிகமாக இருக்கும். இந்த ஆரம்ப விலை வேறுபாடானது சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு நெருக்கமாக வரும். எனவே மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது.

4. டீசல் இன்ஜின்கள் அதிக டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆனால் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது அதன் ஆர்பிஎம் குறைவு. ஆனால் பைக்குகளை பொறுத்தவரை நாம் அதிக வேகத்தை எதிர்பார்ப்போம். அது நமக்கு தேவையான ஒன்றும் கூட. இதன் காரணமாகவும் டீசல் இன்ஜின்கள் பைக்குகளுக்கு 'செட்' ஆவதில்லை.

5. டீசல் எரியும்போது, மிக அதிகப்படியான வெப்பம் உருவாகும். இது சிலிண்டரின் சுவர்கள் மற்றும் இன்ஜினின் இதர பாகங்களை அழித்து விடும். இந்த வெப்பத்தை குறைக்க வேண்டுமென்றால், நமக்கு அதிக மேற்பரப்பு பகுதி மற்றும் முறையான கூலிங் சிஸ்டம் ஆகியவை தேவை. எனவே டீசல் இன்ஜின்கள் பெரிதாக உருவாக்கப்படுகின்றன. இதனாலும் பைக்குகளுக்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தமாக இருப்பதில்லை.

6. சிலிண்டருக்குள் அதிக காற்றை பம்ப் செய்ய டர்போசார்ஜர் அல்லது சூப்பர்சார்ஜரை டீசல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது அதன் விலை மற்றும் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது. இது போன்ற காரணங்களால்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் டீசல் இன்ஜின்களை வழங்குவதை தவிர்க்கின்றன.