சென்னை நகர சாலைகளில் கெத்தாக சுற்றித்திரிந்த சீன வாகனம்... எதற்கு தெரியுமா...?
சீன நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று, தலைநகர் சென்னையில் உள்ள சாலைகளில் வைத்து ஸ்பை செய்யப்ட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை வீழ்த்தும் விதமாக, மின் வாகனங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து, உள் நாடு மற்றும் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய வாகனச் சந்தையில், அதன் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும், யாடியா மின் வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிபடுத்தும் வகையில், அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த புகைப்படத்தை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஸ்பை புகைப்படங்களுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த யாடியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எந்தவொரு ஸ்டிக்கரும் ஒட்டப்படாமல் காட்சிக்குள்ளாகி இருந்தது. பொதுவாக, புதிதாக களமிறங்கும் வாகனங்கள், ஸ்டிக்கர் போன்றவற்றால் மறைத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எந்தவொரு ஒலிவு மறைவுமின்றி காட்சி வழங்கியுள்ளது.

அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருந்த லக்கேஜ் பாக்ஸில் பரிசோதனை வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வருகை மற்றும் அறிமுகம் குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினம், ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருக்கும் இந்த ஸ்டிக்கரை வைத்து பார்க்கும்போது, யாடியா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்த தகவல் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாடியா நிறுவனம், உலகளவில் 19 வகையிலான இ-ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது. அதில், தற்போது, சென்னையில் பரிசோதனைச் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டாரானது, அந்த நிறுவனத்தின்மூலம் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஒய்டி-இஎம்186 ஸ்கூட்டரை போன்று காட்சியளிக்கின்றது.

பாரம்பரிய லுக்கையும், நவீன வசதிகளையும் பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்ரான், ஹெட்லேம்ப் மற்றும் ஹேண்டில்பார் உள்ளிட்டவை நேர்த்தியான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், யாடியாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்ரான், ஹெட்லேம்ப், ஹேண்டில்பார் உள்ளிட்டவை வழக்கத்திற்கு மாறான அமைப்பைப் பெற்றிருக்கின்றன. மேலும், நவீன வசதியாக பெரிய வட்டவடிவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேகமாக, பெரியளவிலான இருக்கை, பின்இருக்கையாளரின் பேக்ரெஸ்ட் மற்றும் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.

சீன நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இதுகுறித்த அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த தகவல் கணிசமாக வழங்கப்பட்டுள்ளன. அதைவைத்து பார்க்கையில், யாடியாய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், 800W திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மின் மோட்டாருக்கு சக்தியளிக்கும் விதமாக 60V 20Ah பேட்டரி அல்லது 48V 20Ah இணைக்கப்பட உள்ளது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமகா மணிக்கு 45கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 55ல் இருந்து 60கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

யாடியா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக, அதன் முன்பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலுக்கு டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இருபக்க வீலிலும் 3.00-10 அளவிலான டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








