மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

ரசிகர்களை கவலையில் ஆழ்த்துகின்ற வகையிலான அறிவிப்பை யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் அதன் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

அந்தவகையில், இந்நிறுவனம் பெரும்பாலும் இளைஞர்களைக் கவரும் வகையிலான ஸ்போர்ட்டி லுக்கிலான இருசக்கர வாகனங்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

இருப்பினும், அவ்வப்போது பட்ஜெட் ரக பைக் விரும்பிகளைக் கவரும் வகையிலும், பட்ஜெட் விலைக் கொண்ட பைக்குகளை, நவீன வசதிகளுடன் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

அந்தவகையில், யமஹா நிறுவனம் எஸ்இசட் ஆர்ஆர் வி2 என்ற பட்ஜெட் ரக பைக்கை, இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்தது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

ஆனால், இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த மே மாத விற்பனையின் முடிவு இருக்கின்றது.

அவ்வாறு, இந்த பைக் கடந்த மே மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்தது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

ஆகையால், யமஹா நிறுவனம் இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு, அதன் விற்பனை மட்டுமே காரணமா என்றால்... இல்லையென என்ற பதில் தான் எங்களிடம் உள்ளது. ஏனென்றால், விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அமலுக்கு வரவிருக்கின்றது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்நிலையில், அதிகம் விற்பனையாகாத யமஹா எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக்கை பிஎஸ்-6 தரத்திற்கேற்ப அப்டேட் செய்ய அந்நிறுவனம் விரும்பவில்லை. ஆகையால், இந்த பைக்கை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

மேலும், தற்போது விற்பனையாகாமல் ஸ்டாக்காக இருக்கும் எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக்குகளை குறிப்பிட்ட டீலர்கள் மூலம் விற்பனைச் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த டீலர்கள் குறித்த தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

யமஹா நிறுவனம், எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக்கை ஹோண்டா நிறுவனத்தின் சிபி யுனிகார்ன் 150 பைக்கிற்கு போட்டியாக அறிமுகம் செய்தது. இந்த பைக் இந்தியாவில் ரூ. 72,057 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது.

அதேசமயம், யமஹா எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக் ரூ. 69,983 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

யமஹாவின் இந்த எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக்கில் 149 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 12 பிஎஸ் பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

இதே தரத்திலான எஞ்ஜின்தான் யமஹா எஃப்இசட் வி3 நேக்கட் ரக பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

அதேபோன்று, இந்த பைக்கிள் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்கு, அதன் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்யூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக பைக்கின் முன் பக்க வீலிற்கு டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலிற்கு டிரம் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... கவலையில் ரசிகர்கள்!

யமஹா நிறுவனம், இந்த வருடத்தில் மூன்று பைக்குகளை சந்தையை விட்டு வெளியேற்றி இருக்கின்றது. அந்தவகையில், யமஹா எஸ்இசட் ஆர்ஆர் வி2 பைக் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. முன்னதாக, அந்நிறுவனம், ஆர்15எஸ் மாடலையும், பேஸர் 155 மாடலையும் விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2019, 20:27 [IST]
English summary
Yamaha Discontinues SZ RR V2. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+