ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...!
யமஹா நிறுவனத்தின் ஃபஸினோ ஸ்கூட்டர் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கான காரணம் மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

யமஹா நிறுவனம், பைக் மட்டுமின்றி ஸ்டைலிஸான ஸ்கூட்டர்களையும் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், இந்திய இளைஞர்கள் மத்தியில் புகழ்வாய்ந்த ஸ்கூட்டராக யமஹா ஃபஸினோ இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைய, அதன் துடிப்பான ஸ்டைலே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதன்காரணமாகவே, யமஹாவின் ஃபஸினோ ஸ்கூட்டர் நல்ல விற்பனை வளர்ச்சியையும் பெற்று வருகின்றது. அந்தவகையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே அதிகம் விற்பனை இருசக்கர வாகன ஃபஸினோ ஸ்கூட்டர் உருவெடுத்துள்ளது. அவ்வாறு, அந்த ஸ்கூட்டர் கடந்த மாதங்களில் 15,459 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இதே ஸ்கூட்டர் கடந்த மே மாதத்தில் 15,132 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

இது, 2 சதவீத வளர்ச்சி தான். இருப்பினும், அந்த நிறுவனத்தின் மற்ற இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் ஃபஸினோ ஸ்கூட்டர் கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பது, அந்த நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேசமயம், இந்த விற்பனை வளர்ச்சியால், ஃபஸினோ ஸ்கூட்டருக்கான டிமாண்ட் கணிசமாக உயர்ந்துள்ளது. ஃபஸினோவின் இந்த விற்பனை வளர்ச்சிக்கு, அதன் பிரிமியம் லுக்கும், மைலேஜும் காரணமாக இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் கூறப்படுகின்றது.

அதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப அறிமுகத்திற்கு பின்னர், யமஹா நிறுவனம் இதுவரை அதில் எந்தவொரு அப்டேட்டையும் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் இளைஞர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆனால், அதன் வண்ணத்தில் மாற்றம் செய்து டார்க்நைட் எடிசனாக கடந்த சில மாதங்களுக்கு களமிறக்கப்பட்டது. ஏற்கனவெ கவர்ச்சியான தோற்றத்தில் இளைஞர்களை மயக்கிய வந்த ஃபஸினோ, யமஹாவின் இந்த நடவடிக்கையால் கூடுதல் கவர்ச்சியைப் பெற்று, நல்ல வரவேற்பை அள்ளிக் குவித்தது.

மேலும், இந்த டார்க்நைட் எடிசனில் வண்ணத்தைத் தவிர வெறெந்த அப்டேட்டையும் ஃபஸினோ பெறவில்லை. ஆகையால், அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும் அதே 113சிசி திறன் கொண்ட அதே எஞ்ஜின்தான் ஃபஸினோவின் அனைத்து வேரியண்ட்களும் பெற்றுள்ளன. இந்த எஞ்ஜின், 7பிஎச்பி பவரையும் 8.1என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் ட்யுப்லெஸ் டயர்கள் மற்றும் சிபிஎஸ் தொழில்நுட்ப்த்தின் கூடிய டிரம் பிரேக்குள் வழங்கப்பட்டுள்ளன.

யமஹாவின் இந்த ஃபஸினோ ஸ்கூட்டர், ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஆகிய ஸ்கூட்டர்களுடன் கடுமையான போட்டியைச் சந்தித்து வருகின்றன. அதேசமயம், இந்த ஸ்கூட்டர்களைக் காட்டிலும், ஃபஸினோ மிகவும் மலிவான மாடலாக இருக்கின்றது.

டார்க்நைட் ஃபஸினோ தற்போது இந்திய மதிப்பில் 56 ஆயிரத்து 793 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையில் இருக்கின்றது. இதன் எடை 103 கிலோவாகவும், எரிபொருள் கொள்ளளவு 5.2 லிட்டராகவும் இருக்கின்றது. மேலும், இது லிட்டர் ஒன்றிற்கு 66 கி.மீ., மைலேஜ் கொடுப்பதாக கூறப்படுகிறது.

யமஹாவின் இந்த ஸ்கூட்டர் முழுமையான அளவு இளைஞர்கள் மத்தியில் சென்றடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், ஹீரோ மற்றும் ஹோண்ட ஸ்கூட்டர்களுக்கு இருப்பதைப்போன்று தனிப்பட்ட ஷோரூம்கள் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








