வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

யமஹா நிறுவனம் புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களை மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் எஃப்இசட் மாடலின் எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகியுள்ளன.

இந்த அப்டேட்டால் இரு மோட்டார்சைக்கிள்களும் டார்க்நைட் மற்றும் மெட்டாலிக் க்ரே என்ற இரு நிற தேர்வுகளை கூடுதலாக பெற்றுள்ளன. எக்ஸ்ஷோரூம்களில் எஃப்இசட் எஃப்ஐ பைக் ரூ.99,200ல் இருந்தும் மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக் ரூ.1,01,200ல் இருந்தும் விற்பனையாகவுள்ளது.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

யமஹா எஃப்இசட்-ன் நீல நிற கான்செப்ட்டை கொண்டுள்ள இந்த பைக்குகள், 9.6:1 என்கிற ஒப்பிட்டு விகிதத்துடன் கூடிய 149சிசி என்ஜினை பெற்றுள்ளன. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிம்மில் 12.4 பிஎச்பி ஆற்றலையும் 5,500 ஆர்பிஎம்மில் 13.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த இரு பைக்குகளும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பை முன்புற சக்கரத்திலும் டிஸ்க் ப்ரேக் அமைப்பை பின்புற சக்கரத்திலும் கொண்டுள்ளன. இத்துடன் நெகட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிளவு இல்லாத இருக்கை அமைப்புகளை இரு மோட்டார்சைக்கிள்களும் பெற்றுள்ளன.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

இந்த பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை வேரியண்ட்களின்படி பார்த்தால், எஃப்இசட்-எஸ் எஃப்ஐ-ன் புதிய டார்க்நைட் வேரியண்ட் ரூ.1,02,700க்கும், புதிய மெட்டாலிக் ரெட் ரூ.1,01,200க்கும் மற்ற வழக்கமான வேரியண்ட்களான டார்க் மாட் ப்ளூ, மாட் ப்ளாக், க்ரே மற்றும் சியான் ப்ளூ ரூ.1,01,200க்கும் விற்பனையாக உள்ளன. எஃப்இசட் எஃப்ஐ பைக்கை பொறுத்த வரையில் மெட்டாலிக் ப்ளாக் மற்றும் ரேசிங் ப்ளூவின் விலை ரூ.99,200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

இந்த பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகம் குறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் மோட்டோஃபூமி ஷிதாரா கூறுகையில், பிரமாண்டமான தயாரிப்புகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை ஸ்டைலிஷ் மோட்டார்சைக்கிளிங் கலாசாரத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமே எங்களை இத்தகைய தயாரிப்புகளை தயாரிக்க வைத்தது.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

பிஎஸ்6-ற்கு இணக்கமான இந்த மோட்டார்சைக்கிள் 2019 நவம்பர் முதல் இந்தியா முழுவதும் உள்ள யமஹா ஷோரூம்களில் கிடைக்கும். எஃப்இசட் தனித்துவமான பிராண்ட் மாடலாக உள்ளது. இந்த பைக்கை போல் மேலும் பல மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்6-ற்கு இணக்கமாக மாற்றப்படவுள்ளன. யமஹா நிறுவனம் இத்தகைய பிஎஸ்6 தயாரிப்புகளை உருவாக்கும் திட்டத்தில் மிகவும் கவனமாக பணியாற்றியுள்ளது.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

விலையை அதிகரித்துவிட கூடாது மற்றும் விற்பனை பைக்குகளின் எண்ணிக்கையையும் 2.5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பிஎஸ்6 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 150சிசியில் பிஎஸ்6-ற்கு இணக்கமான மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் யமஹா நிறுவனம் இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியில் இன்னும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது என கூறினார்.

வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

இந்த இரு பைக்குகளை போல் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கின் அறிமுகம் இந்த நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

எஃப்இசட் எஃப்ஐ, எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மற்றும் ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்குகள் மட்டுமல்லாமல் யமஹா நிறுவனத்தின் சேர்மன் மோட்டோஃபூமி ஷிதாரா கூறியதுபோல் இன்னும் பல ஸ்கூட்டர்களும் மோட்டார்சைக்கிள்களும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 2020 ஏப்ரல் 1-ற்குள் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2019, 15:48 [IST]
English summary
Yamaha Rides In The BS6 FZ-Fi to India
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+