விரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்!!!
இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக்கான எஃப்இசட் எஸ் பைக்கின் புதிய மாடலான யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் வசதியுடன் இம்மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது. யமஹா எஃப்இசட்16 பைக்கின் அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை இனி காணலாம்.

கட்டுறுதிக்கும், பெர்பார்மென்சுக்கும் பெயர்போன யமஹா நிறுவனத்தின் பைக்குகளில், 150சிசி ரகத்தை சேர்ந்த எஃப் இசட்-1 வரிசையின் மேம்படுத்தப்பட்ட மாடலே எஃப் இசட்-16.

தோற்றத்தில் ஜல்லிக்கட்டு காளையை நினைவு படுத்தும் எஃப் இசட்-16 மாடல், செயலிலும் தனது உத்வேகத்தை காட்டுகிறது. பிக்கப்பில் பின்னும் எஃப் இசட்-16, 150சிசி ரக மார்க்கெட்டில் மிரட்டும் தோரணையில் தனது நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது.

ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ், பட்ஜெட் என அனைத்திலும் இளசுகளின் கனவு பைக்காக எஃப்இசட் எஸ் திகழ்கிறது. யமஹாவின் அந்தஸ்தை இந்திய வாடிக்கையாளர் மத்தியில் உயர்த்திய பெருமை எஃப்இசட் பைக்குகளுக்கு உண்டு. அதிலும், குறிப்பாக எஃப்இசட் எஸ் யமஹாவின் அந்தஸ்தை மட்டுமல்ல விற்பனையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

முற்றிலும் வித்தியாசமான டிசைன், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ஹெட்லைட் ஆகியவை எஃப்இசட் பைக்கின் முக்கிய அம்சங்களாக கூறலாம். எஃப்இசட் எஸ் பைக்கின் புதிய மாடலான யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் வசதியுடன் இம்மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வரும் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

யமஹா நிறுவனம் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் விற்பனைக்கு வரும் என இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் இம்மாதம் விற்பனைக்கு வருவது யமஹா வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யமஹா எஃப்இசட்16 பைக் 149சிசி திறன், ஏர் கூல்டு தொழில்நுட்பம் பெற்றது. பைக்கின் எஞ்சின் அதிகப்பட்சமாக 13 பிஎச்பி பவர் மற்றும் 12.8 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா பைக் எஃப்இசட் மாடல்கள் இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடலாக வலம் வருகிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனைக்கு வரும் யமஹா எஃப்.இசட்16 பைக் இந்தியாவில் சுஸுகி ஜிக்சர், பஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹோண்டா எக்ஸ் பிளேடு உள்ளிட்ட மாடல்களுக்கு செயல்திறன் மற்றும் விலையில் போட்டியாக அமையும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








