முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

யமஹா நிறுவனத்தில் 14 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய ராய் குரியன், தற்போது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, மிக மிக மலிவான விலையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றை தயாரித்து உள்ளார். இதுகுறித்த முக்கியமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

யமஹா இந்தியா நிறுவனத்தில் 14 வருடங்களாக பணியாற்றி வந்த ராய் குரியன், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அன்று யமஹா நிறுவனத்தில் இருந்து விலகினார். இவர் கடைசியாக அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதற்கும்போது, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் மூத்த துணைத் தலைவராக பணியாற்றினார்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த பணியை விட்டு விலகிய அவர், இந்தியாவின் புனே நகரத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்ஸ் என்னும் நிறுவனத்தில் இணைந்தார். இது எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கக் கூடிய நிறுவனமாகும்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

ராய் குரியனுக்கு முன்னதாக, பெட்ரோல் சார்ந்து இயங்கும் வாகனங்கள் தயாரிப்பில் மட்டுமே அனுபவம் இருந்தநிலையில், மின் வாகனம் தயாரிக்கும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் தன்னால் எந்தவிதமான வாகன உற்பத்தியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது நிரூபித்துக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

அதற்கேற்ப, அவர் அந்த நிறுவனத்தில் இணைந்து சுமார் நான்கு மாதங்கள் ஆகியநிலையில், அவரது பங்களிப்புடன் உருவாகியுள்ள முதல் தயாரிப்பான டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றார்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம்தான், நாட்டின் முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே தற்போது தான் தயாரித்து வருகின்றன. ஆனால், இந்த நிறுவனம் ஒரு படி மேலேச் சென்று, மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியாக பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

அதன்படி, அந்த நிறுவனம் முதல் எலக்ட்ரிக் பைக்கை முதல்கட்டமாக பெங்களூருவிலும், தொடர்ந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

டார்க் மோட்டார்ஸ், அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கான டார்க் டி6எக்ஸ் மாடலை, கடந்த 2015ம் ஆண்டில் இருந்தே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி தயார் செய்து வருகின்றது. அந்தவகையில், இந்த பைக்கை அவ்வப்போது, புனே நகரத்தின் சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் காட்சிகள் வெளியாகின.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

மேலும், இந்த பைக்கிற்கான புக்கிங் கடந்த 2016ம் ஆண்டு முதலே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களை அடக்கியுள்ள இந்த பைக்கில், அந்த நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள டிஐஆர்ஓஎஸ் என்னும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது, பைக்கை மணிக்கு 85 முதல் 100 கிமீ வேகத்தில் செலுத்த உதவும்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

இத்துடன், ஜிபிஎஸ், யுடிலிட்டி ஸ்டோரேஜ், கிளவுட் கனெக்டிவிட்டி மற்றும் மொபைல் போன் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் பயணிக்கலாம்.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

இதற்கான பேட்டரிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றது. அதேசமயம் இதன் மற்ற பாகங்கள் உள்நாட்டில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து மட்டுமே பெறப்படுகிறது. இதனால், இந்த பைக்கில் 90 சதவீத பாகங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை அடக்கியதாக இருக்கின்றது.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

மேலும், இந்த பைக்கில் ரைடரின் இருக்கைக்கு அடியில், சப் ஃப்ரேமுடன் ட்ரெல்லிஸ் எனப்படும் ஃப்ரேம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ரேமில்தான், பைக்கின் பேட்டரி, எஞ்ஜின் உள்ளிட்ட சில முக்கிய பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பும், பின் பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக முன்பக்கத்தில் 267mm கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 220mm டிஸ்க் பிரேக்கும், சிங்கிள் சேனல் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் 80/100-17 அளவு கொண்ட டயரும், பின்பக்கத்தில் 110/80-17 அளவு கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியரின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன யமஹா: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா...?

பல்வேறு, அம்சங்களைக் கொண்டு, அதிகளவிலான பாகங்களை உள்நாட்டில் இருந்தே தயாராகி இருக்கும் இந்த பைக் ரூ. 1.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இந்த பைக்கை நடப்பாண்டில் இல்லாமல் அடுத்த வருடம்தான் சாலைகள் காண முடியும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Yamaha Indias EX VP Joins Tork Motors. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X