அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று சென்னைவாசிகளை கவர்கின்ற வகையில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை விரிவாக கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, பட்ஜெட் விலையைக் கொண்ட ஸ்போர்டஸ் ரக வாகனங்களை அறிமுகம் செய்வதில் சிறந்து விளங்கி வருகின்றது.

இந்தநிலையில், சென்னை வாசிகளைக் கவரும் நோக்கில், நீல சதுரங்கம் (Blue Square) என்ற ஸ்பெஷல் ஷோரூமை அது தொடங்கியுள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

இந்த ஷோ-ரூமை, யமஹா நிறுவனம் அதன் ரேஸிங் டிஎன்ஏ வாகனங்களை தனி கவனத்துடன் காட்சிப்படுத்தும் (விளம்பரம்) நோக்கில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட ஷோ-ரூம்களை வருகின்ற 2020ம் ஆண்டு முடிவிற்குள் நாடு முழுக்க திறக்க இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

யமஹா நிறுவனம் இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோ-ரூமை, ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்ற வகையில் உருவாக்கியுள்ளது.

ஆகையல், யமஹாவின் இந்த புதிய ஷோரூம்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி அவற்றிற்கு தேவையான அக்ஸசெரீஸ்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்து உபகரணங்களும் கிடைக்கும் என தெரிகின்றது.

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

இத்துடன், வாடிக்கையாளர்களின் தகவல்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கவும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு க்யூஆர் ஸ்கேன் கோடு வழங்கப்படும். இது பிற்காலங்களில் வாடிக்கையாளர்கள் ஷோரூம்களை எளிதில் நாடவும், கடந்த கால வரலாற்றினை சரி பார்த்துக்கொள்ளவும் உதவும்.

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

தொடர்ந்து, இந்த ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் இளைப்பாறும் வகையில் சிறிய தேநீர் மற்றும் குளிர்பான விடுதியும் அமைக்கப்பட உள்ளது. ஆகையால், வாடிக்கையாளர்கள் தங்களின் காத்திருப்பு நேரத்தை வீநடிக்காமல் தேநீர் அல்லது பழச்சாறுகளுடன் கழிக்க முடியும்.

MOST READ: போலீஸை ஏமாற்ற இளைஞர் செய்த தந்திரம்... ஆனா, இப்புடி மாட்டிக்கிட்டியே குமாரு...

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

இந்த ஷோரூமின் அறிமுகம்குறித்து யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் மோடோஃபுமி ஷிதாரா கூறியதாவது, "எங்களை ஊக்குவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கின்றோம். இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள், சிறப்பாக ப்ளூவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் வாகனங்களை நிலைநிறுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆகையால், எதிர்கால வாகனங்கள்கூட இங்கு காட்சிப்படுத்தப்படும். எனவே, இதனை யமஹாவின் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் வரவேற்பார்கள் என நம்புகின்றோம்" என்றார்.

MOST READ: பாஜக-வை வீழ்த்திய உத்தவ்.. பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா..?

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

தொடர்ந்து பேசிய அவர், "மோட்டார்சைக்கிள் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே, அவற்றை சிறப்பு அக்கறைக் கொண்டு காட்சிப்படுத்த வேண்டியது தற்போதைய கட்டாயமான சூழலாக மாறியுள்ளது. இதற்கு யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் வழிவகைச் செய்யும் என எதிர்பார்க்கின்றோம்" என கூறினார்.

MOST READ: டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ

அதிர்ஷ்டசாலிகள் சென்னை வாசிகள்... நீல சதுரங்கம் ஷோரூமை தொடங்கிய பிரபல நிறுவனம்... எது தெரியுமா...?

மேலும், "இந்த சிறப்பு ஷோ-ரூம்களில் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட உள்ளன. தற்போது, முதல் கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதைப்போன்றே நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக" அவர் தெரிவித்தார்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launched New Blue Square Showroom In Chennai. Read In Tamil.
Story first published: Thursday, December 12, 2019, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X