யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

யமஹா நிறுவனம், அதன் மூன்று பிரபலமான இருசக்கர வாகனங்களை மான்ஸ்டர் வேரியண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம், இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஓர் புதிய மைல் கல்லைத் தொடும் விதமாக, அதன் மான்ஸ்டர் ரகத்திலான மோட்டோ ஜிபி லிமிடெட் எடிசன் மாடலிலான இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில், ஒய்இசட்-ஆர்15 வி3.0 (155சிசி), எஃப்இசட் 25 (249சிசி) மற்றும் சிக்னஸ் ரே இசட்ஆர் (113சிசி) ஆகிய இருசக்கர வாகனங்களைதான் மோட்டிஜிபி ரகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

இந்த 2019 மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி லிமிடெட் எடிசன் மாடல் பைக்குகள் தற்போது விற்பனையில் இருக்கும் அதன் முந்தைய மாடல்களைக் காட்டிலும், கணிசமான விலையுயர்வைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு, ஒய்இசட்-ஆர்15 வி3.0 (155சிசி) மாடலுக்கு ரூ. 1,42,780 என்ற விலையும், எஃப்இசட் 25 (249சிசி) மாடலுக்கு ரூ. 1,36,680 என்ற விலையும், சிக்னஸ் ரே இசட்ஆர் (113சிசி) மாடலுக்கு ரூ. 59, 028 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

யமஹா நிறுவனம் இந்த குறுப்பிட்ட மாடல்களை லிமிடெட் எடிசன் தரத்தில் அறிமுகம் செய்ய ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அது, இந்த மாடல்கள்தான் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருக்கின்றன. இதுவே, இவற்றின்மீது இத்தகைய சிறப்பு நடவடிக்கையை யமஹா மேற்கொள்ள முக்கிய காரணமாக இருக்கின்றது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

இந்த மான்ஸ்டர் எனர்ஜி லிமிடெட் எடிசன்மூலம், அந்நிறுவனம் புதிய ரேஸிங் ஸ்பிரிட்டையும், சாதாரண ரைடிங்கிற்கான மாறான அனுபவத்தையும் வழங்கும் வகையில் களமிறக்கியுள்ளது. இத்துடன், இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரேஸ் ரகத்திலான டி-ஷர்ட்டை அந்நிறுவனம் இலவசமாக வழங்க இருக்கின்றது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

இந்த பைக்குகளில் மெக்கானிக்கல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆனால், லைவரி அப்டேட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மாடல்களும் யமஹா நிறுவனத்தின் ஒய்இசட்ஆர்-எம்1 மாடலைத் தழுவி தயார்செய்யப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

அந்தவகையில், ப்யூவல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்டவை மாற்றிமைக்கப்பட்டுள்ளன. இத்துடன், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி லைவரி, பிரிமியம் கோல்ட் யமஹா மோட்டார் ட்யூனிங் ஃபோர்க் லோகோ, யமஹா ரேஸிங் ஸ்பீடு பிளாக் லோகோ மற்றும் பிராண்ட் ஸ்லோகன் லோகோ உள்ளிட்டவை இந்த லிமிடெட் எடிசன்களில் காணப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, யமஹா நிறுவனம் விரைவில் அப்ரில்லா மற்றும் வெஸ்பா உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியளிக்கும் வகையிலான புதிய ரக ஸ்கூட்டரை களமிறக்க இருக்கின்றது. என்மேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அது, 155 சிசி திறன் கொண்ட பிரிமியம் ரக ஸ்கூட்டராகும். தற்போதைய, இந்திய ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி திறனிலான ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் சூழ்நிலையில், யமஹா நிறுவனம் நேரடியாக 155 சிசி சந்தையில் குதிக்க தயாராகி வருகின்றது.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

மேக்ஸி ரகத்தில் களமிறங்க உள்ள இந்த அந்த ஸ்கூட்டரில் 155 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

யமஹா ஆர்15 வி3, எஃப்இசட்25, ரே இசட்ஆர் மாடல்களின் மான்ஸ்டர் வெர்ஷன் அறிமுகம்... புகைப்படம் உள்ளே!

இத்துடன், இந்த ஸ்கூட்டரில் வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் திறன் இணைக்கப்பட உள்ளது. இது, எஞ்ஜினின் உயர் மற்றும் அதிக செயலாற்றலின்போது, சீறாக இயங்க உதவும். இது இந்தியாவில் ரூ. 1 லட்சம் என்ற விலையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2019, 16:22 [IST]
English summary
Yamaha launched Ray ZR, FZ25, R15 V3 Monster Edition in India. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+