டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் கலக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

யமஹா நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஃபஸினோவை டார்க்நைட் எடிசன் ஸ்டைலில் வடிவமைத்துள்ளது. இந்த பைக் விரைவில் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் களக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கிவரும் யமஹா, இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. அதன்படி, யமஹா அனைத்து வயதினர்களுக்கும் ஏற்ப வாகனங்களைத் தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்கிறது.

யமஹா தயாரித்து வரும் பைக் மற்றும் ஸ்கூட்டருக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு உள்ளது. அவ்வாறு, யமஹாவின் ஆர்15, எஃப்இசட் ஆகிய பைக்குகள் மிகவும் பிரபலமானவை. அதேபோன்று, ஸ்கூட்டரில் சிக்னஸ் ரே, ஃபஸினோ ஆகியவை பிரபலமடைந்து விற்பனையில் அதிகளவில் இடம் பிடித்தன.

டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் களக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

இந்த நிலையில், யமஹா நிறுவனம் தனது வாகனங்களின் வரிசைப்படுத்தப்பட்ட விலையை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, 2019ம் ஆண்டின் புதிய நார்ம்ஸுக்கு ஏற்ப தயாராகி வரும் ஃபஸினோவின் விலையை 52 ஆயிரத்து 272 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்திருந்தது. மேலும், புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் வாகனங்களில், யுபிஎஸ் (UBS) பிரேக்கிங் சிஸ்டம் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிக்கு வாழ்நாள் முழுவதும் இலவச சர்வீஸ் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் களக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

இந்நிலையில், யமஹா நிறுவனம் ஃபஸினோவை மேலும் மேம்படுத்தும்விதமாக டார்க்னைட் எடிசனில் தயாரித்து வருகிறது. அதன்படி, புதிதாக தயாராகி வரும் இந்த ஃபஸினோ கருப்பு நிறத்தில் சற்று மாறுபட்ட ஸ்டைலைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஃபஸினோவில், 113சிசி ஏர்-கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 7பிஎச்பி பவரையும் 8.1என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த ஸ்கூட்டரில் பழைய மாடலில் உள்ளதைப்போன்றே டியுப்லெஸ் டயர்ஸ், டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இதில் கூடுதலாக யுபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் களக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

இந்த டார்க்நைட் ஃபஸினோவின் எடையானது 103கிலோவாக இருக்கின்றது. இதன் பெட்ரோல் டேங்க் 5.2 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாக உள்ளது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 66 கி.மீ., மைலேஜ் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு இந்தியாவில் 56 ஆயிரத்து 793 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் களக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...?

ஃபஸினோவைத் தொடர்ந்து யமஹாவின் மேலும் சில பைக்குகளும் டார்க்னைட் வரிசையில் தயாராகி வருவதாக யமஹா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, டார்க்நைட் ரகத்தில் ஃபஸினோ மற்றும் ஆர்15 வி3.0 ஆகிய வாகனங்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனம் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2019, 11:12 [IST]
English summary
Yamaha Launching Fascino Darknight Edition In India. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+