புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதுப்பொலிவுடன் யமஹா எம்டி- 09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். யமஹா எம்டி-09 பைக் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைத்து வந

புதுப்பொலிவுடன் யமஹா எம்டி- 09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா எம்டி-09 பைக் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைத்து வந்தது. இந்த நிலையில், நைட் புளோ என்ற புதிய வெள்ளை வண்ணக் கலவையிலும் இனி கிடைக்கும். பெட்ரோல் டேங்கில் இருக்கும் யமஹா லோகோ சிவப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், பெட்ரோல் டேங்கின் இரு புறத்திலும் பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, கூம்பு வடிவிலான ஒற்றை இருக்கை அமைப்பு முக்கியமாக கூறலாம்.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 847 சிசி எஞ்சின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய யமஹா எம்டி-09 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் லிங்க் டைப் சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 298 மிமீ அளவுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 245 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா எம்டி-09 பைக் 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் 120/70 டயரும், பின்சக்கரத்தில் 180/ 55 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் 193 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 135 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா எம்டி-09 பைக்கில் குயிக் ஷிஃப்ட் வசதி, ரைடு பை ஒயர் சிஸ்டம், ஸ்லிப்பர் அசிஸ்ட் க்ளட்ச், மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள், அட்ஜெஸ்ட் வசதியுடன் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய முக்கிய தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.10.55 லட்சம் எகஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். கவாஸாகி இசட்900, டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் 765 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 22, 2019, 11:14 [IST]
English summary
Yamaha Motors India has launched the 2019 MT-09 in India. The 2019 Yamaha MT-09 comes with a price tag of Rs 10.55 lakh, ex-showroom (Delhi) and features minor cosmetic changes, along with the addition of a new paint scheme.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+