விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

யமஹா ஆர்-15 பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடல். யமஹா ரேஸ் பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களுடன் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாடலுக்கு அதீத வரவேற்பு இருந்து வருகிறது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், இதன் நேக்கட் எனப்படும் திறந்த உடல் அமைப்பு உடைய மாடலையும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய யமஹா முடிவு செய்துள்ளது. யமஹா எம்டி-15 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த புதிய பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், முக்கிய விபரங்கள் இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சின், பரிமாணம் மற்றும் இதர முக்கிய விபரங்களும் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

யமஹா ஆர்-15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த புதிய எம்டி-15 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய யமஹா எம்டி-15 பைக் 2,020 மிமீ நீளமும், 800 மிமீ அகலமும், 1,070 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் 1,335 மிமீ. எடை 288 கிலோவாக தெரிவிக்கப்பட்டாலும், ஓட்டுபவரின் எடையும், பெட்ரோல் நிரப்பிய நிலையில் வண்டியின் நிகர எடையாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

வீல் பேஸ் மற்றும் நீள, அகலம் ஆகியவை இந்தோனேஷியாவில் விற்பனையாகும் யமஹா எம்டி-15 மாடலுக்கு இணையானதாகவே இருக்கிறது. ஆனால், உயரம் மட்டும் 5 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியா வரும் மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்றே மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

மேலும், யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே சஸ்பென்ஷன் அமைப்புதான் இதிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் நிரந்தர அம்சமாக இருக்கும்.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

வெளிநாடுகளில் விற்பனையாகும் மாடலில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், அலுமினியத்தாலான ஸ்விங் ஆர்ம் தாங்கி அமைப்பும் உள்ளன. ஆனால், இந்தியாவில் விலையை சவாலாக நிர்ணயிக்கும் நோக்கில், இவற்றை தவிர்த்துள்ளது யமஹா.

விரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

யமஹா ஆர்-15 வி3.0 பைக்கின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக் மாடலாக புதிய எம்டி-15 மாடல் வர இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. பஜாஜ் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, கேடிஎம் ட்யூக் 125 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 31, 2019, 11:15 [IST]
English summary
Yamaha Motors India is all set to launch their new MT-15 motorcycle in the Indian market. Ahead of its launch, IAB has shared a leaked document revealing the engine specifications, dimensions and other details of the upcoming MT-15 motorcycle.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+