புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக் மாடல் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், தனது மார்க்கெட்டை வலுப்படுத்தும் விதத்தில், தனது ஆர்15 பைக்கின் நேக்கட் ரக மாடலான எம்டி-15 பைக்

யமஹா நிறுவனத்தின் புதிய 150சிசி பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக் மாடல் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், தனது மார்க்கெட்டை வலுப்படுத்தும் விதத்தில், தனது ஆர்15 பைக்கின் நேக்கட் ரக மாடலான எம்டி-15 பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய யமஹா முடிவு செய்துள்ளது.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

கவரும் டிசைன், செயல்திறன் மிக்க ஆர்15 பைக்கின் எஞ்சின் ஆகியவை இந்த பைக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த சூழலில், வரும் மார்ச் 15ந் தேதி இந்த புதிய எம்டி-15 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

யமஹா எஃப்இசட் வரிசையிலான நேக்கட் ரக பைக் மாடல்களுடன் இது சற்றே பிரிமீயம் ரக மாடலாக விற்பனை செய்யப்படும். மேலும், இந்த புதிய பைக் மாடல் பிற நிறுவனங்களின் பைக்குகளுக்கு மட்டுமின்றி, யமஹாவின் எஃப்இசட் வரிசை மாடல்களுக்கும் டஃப் கொடுக்கும் என தெரிகிறது.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் உயர்த்தப்பட்ட அமைப்பிலான ஹேண்டில்பார், எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்பிளிட் வகை இருக்கை அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

புதிய யமஹா எம்டி-15 பைக் 1,335 மிமீ வீல்பேஸையும், 135 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும் இந்த பைக் மிக தனித்துவமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

புதிய யமஹா எம்டி-15 பைக் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் இடையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது 155சிசி மாடலாக இருந்தாலும், விலை அடிப்படையில் 200சிசி மாடல்களுடன் போட்டி போடும். பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் கேடிஎம் 125 ட்யூக் பைக் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

ரூ.5,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்!

அண்மையில்தான் யமஹா எஃப்இசட் பைக் மாடல்கள் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய யமஹா எம்டி-15 பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 4, 2019, 15:55 [IST]
English summary
Yamaha Motor India is all set to launch the new MT-15 naked sportsbike in the country. Bookings for the same were already started at select dealerships for an amount of Rs 5000, while deliveries are promised to commence in the first week of April.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+