ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

டெல்லி அருகே உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

டெல்லி அருகே உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய இளைஞர்களின் விருப்பமான பைக் மாடலாக வலம் வரும் யமஹா ஆர்-15 பைக்கின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது இந்த யமஹா எம்டி-15 பைக்.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா ஆர்-15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சேஸி, எஞ்சின், பிரேக் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவைதான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிசைனில் மட்டுமே மாறுபடுகிறது. இந்த பைக்கில் மிரட்டலான ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட்டில் எல்இடி விளக்குகள் இருக்கின்றன. பகல்நேர விளக்குகளும் இடம்பெற்றுள்ளன.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் டேங்க் டிசைனும் பைக்கிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் இருப்பது கவனிக்கத்தக்க விஷயம். சாரி கார்டு, அகலமான பின்புற டயர்கள் இந்த பைக்கின் தோற்றத்தை மிக கம்பீரமாக காட்டுகின்றன.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் பிரெஸ்டு ஸ்டீலில் ஆன ஸ்விங் ஆர்ம் பொாருத்தப்பட்டு இருக்கிறது. உற்பத்தி செலவீனத்தை குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் வேரியபிள் வால்வு டைமிங் (VVT) தொழில்நுட்பத்தில் இயங்கும் எஞ்சின் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தரும். அதேபோன்று, இதன் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்குகளுக்கான இருக்கை அமைப்பும், ஓட்டுதல் அனுபவத்தை சிறப்பாக உயர்த்தும்.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் இருக்கும் இசியூ மேப்பிங்கிலிருந்து மாறுபட்ட இயங்கும் முறையுடன் கூடிய இசியூ மேப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதனால், டார்க் திறனை சிறப்பான முறையில் இந்த பைக் வெளிப்படுத்தும்.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் டிஜிஸ்ட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இருக்கும் நிலைியல், இந்தியாவில் வந்துள்ள மாடலில் முன்புறத்தில் சாதாரண டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பர் உள்ளது.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் உள்ளன. யமஹா ஆர்15வி3.0 பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் இருக்கும் நிலையில், இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க்,155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 138 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய யமஹா எம்டி-15 பைக் ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட இதன் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான யமஹா ஆர்15 வி3.0 பைக்கைவிட ரூ.3,000 குறைவான விலையில் இந்த எம்டி-15 மாடல் வந்துள்ளது.

ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி ஏபிஎஸ், பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ், கேடிஎம் ட்யூக் 125 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது. எனினும், போட்டியாளர்களைவிட அதிக விலை கொண்ட மாடல் யமஹா எம்டி-15 என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2019, 13:34 [IST]
English summary
The Yamaha MT-15 has been launched in India at a starting price of Rs 1.36 lakh. The Yamaha MT-15 is one of 2019's most awaited motorcycles in India. Well, it has now been launched in the Indian market and will soon be available at dealerships.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+