விற்பனையில் அதிரடி காட்டும் எம்டி15 பைக்கில் புதிதாக 3 வண்ணங்கள் அறிமுகம்! புகைப்படங்கள் உள்ளே...

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, எம்டி15 பைக்கில் கூடுதல் வண்ணங்களை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு, அந்த நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலான ஆர்15 வி3 மாடலின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களை எம்டி15 பைக்குகள் பெற்றுள்ளன.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

யமஹா நிறுவனம், எம்டி15 மாடல் பைக்கை கடந்த 2019ம் ஆண்டு 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. அப்போது, இந்த பைக் டார்க் ப்ளூ மேட் மற்றும் பிளாக் மேட் ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தன. இதன்காரணமாகவே இந்த பைக்கை சிலர் காலியான15 (Empty15) என கிண்டலாக அழைத்தனர்.

மேலும், யமஹாவின் இந்த பைக்கில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இணைக்கப்படாததும் இதற்கு காரணாக அமைந்தது.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

இந்த நிலையில், இந்த பைக் குறித்த கருத்து கேட்பு ( feedback) கேம்பைனை யமஹா நிறுவனம் மேற்கொண்டது. அதில், நிறத் தேர்வையே பெரும் குறையாக பலர் குறிப்பிட்டிருந்தனர். இதன்காரணமாக, யமஹா நிறுவனம், எம்டி15 பைக்கில், கூடுதலான வண்ண தேர்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டது. அதனடிப்படையில் தற்போது, புதிய மூன்று வண்ணங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

அவ்வாறு, ஆர்15 வி3 மாடலின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களை எம்டி15 பைக்குகள் பெற்றுள்ளன. இந்த புதிய வண்ணங்கள் குறித்த புகைப்படங்களை பி4சூஸ் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

அதேசமயம், இந்த புதிய வண்ணங்கள் மேட் ஃபினிஸிங் அல்லாமல், மெட்டாலிக் ஃபினிஸிங்கிள் இருக்கின்றன. இந்த புதிய வண்ணத்திலான யமஹா எம்டி15 பைக்குகள் தற்போது, அதன் டீலர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

இந்த வண்ண மாற்றம், அதன் விலையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், எம்டி15 பைக்குகள் பழைய விலைப்படியே, அதாவது, ரூ. 1.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கும்.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

யமஹா நிறுவனத்தின் புதிய எம்டி15 பைக்கிற்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அவ்வாறு, கடந்த மார்ச் மாதம் மட்டும் எம்டி15 பைக்கின் யூனிட்கள் 5,203 விற்பனையைப் பெற்றன. தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் 3,823 யூனிட்டுகள் விற்பனையாகின. இவ்வாறு, இந்த பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு நிலவியதால், முன்னதாக எம்டி15 பைக்கை வாங்கிய உரிமையாளர்களுக்கு ஹெல்மட் அல்லது ரைடிங் ஜாக்கட் இலவசமாக வழங்க இருப்பதாக யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

தொடர்ந்து, குறிப்பிட்ட காலம் வரை எதிர்காலங்களில் எம்டி15 பைக்கை வாங்குபவர்களுக்கும் இந்த இலவசம் வழங்கப்பட இருப்பதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டபோது, எதிர்மறையான விமர்சனத்தையேப் பெற்றிருந்தது.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

அதற்கேற்ப, இந்திய ஸ்பெக் மாடல், சர்வதேச எம்டி15 பைக்கைக் காட்டிலும் நிறத்திலும் சரி, தொழில்நுட்ப அம்சங்களிலும் பின்தங்கிய மாடலாக இருந்தன. அந்தவகையில், முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், கலர்ஃபுல் அலாய்கள், ஸ்போர்ட்டி லுக் ப்யூவல் டேங்க் உள்ளிட்டவை இந்திய மாடலில் குறையாக இருந்தன.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

இதன்காரணமாகவே பலர் இந்த பைக்கிற்கு எதிராக பேச ஆரம்பித்தனர். மேலும், எம்டி15 பெயருக்கு பதிலாக எம்ப்டி15 என பட்டபெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். ஆனால், இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களை அப்படியே மாற்றும் விதமாக தற்போதைய சூழல் நிலவி வருகின்றது. அவ்வாறு, இதன் ஸ்டைலான லுக்கில் மயங்கிய இந்திய இளைஞர்கள் இதற்கான சந்தையை, யாரும் எதிர்பாரத வகையில் விரிவுபடுத்திக் கொடுத்துள்ளனர்.

விற்பனையில் அதிரடி காட்டி வரும் எம்டி15 பைக் புதிதாக 3 வண்ணங்களில் அறிமுகம்...! புகைப்படங்கள் உள்ளே...

இந்த பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில், யமஹா நிறுவனம், 155சிசி திறனுள்ள எஞ்ஜினை இணைத்துள்ளது. இதே எஞ்ஜின்தான் ஆர்15 வி3 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் சிறப்பு தொழில்நுட்ப அம்சமாக, சிங்கிள் எஃப்ஐ தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது, 19.3 பிஎஸ் பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2019, 14:16 [IST]
English summary
Yamaha MT15 Spotted With Three New Colors. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+