மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

யமஹா நிறுவனம், அதன் ஆர்125 மோட்டோஜிபி எடிசன் வெர்ஷனை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

யமஹா நிறுவனம், அதன் ஆர்125 மோடோ ஜிபி எடிசன் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் மோட்டோஜிபி லிவரி மாடலை ஆர் வரிசையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்தவகையில் இந்த வருடத்திற்கான ஆர்125 மோட்டோஜிபி லிவரி மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

இந்த ஆர்125 மோட்டோஜிபி எடிசன், அதன் பழைய மாடல் ஸ்டைலியிலேயே களமிறங்கியுள்ளது. இதில், பெரிய மாற்றமாக அதன் கிராஃபிக்ஸ் டிசைன் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பைக்கின் முகப்பு பக்கத்தில், ஹெட்லைட் கீழே பக்கவாட்டில் மான்ஸ்டர் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இது, மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட்டி லுக் மற்றும் கவர்ச்சியான லுக்கை வழங்குகிறது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

அதேபோன்று இந்த பைக்கிற்கு, ரேஸ்-ஸ்பெக் மாடலான எம்1 மாடலைப்போன்று, கருப்பு மற்றும் நீலம் கலந்த வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த புதிய பைக் ரெப்லிகா வடிவிலும் காட்சியளிக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் வருகின்ற வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

ஆனால், இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வருகை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அதேசமயம், இது ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. ஆகையால், இதற்கு பதிலாக மோட்டோஜிபி லிவரி வெர்ஷனில் உள்ள ஆர்15 3.0 வேரியண்ட் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

இதனை யமஹா நிறுவனம், கடந்த வருடம்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிள் சிறிய ரகத்தில் காணப்பட்டாலும், பிரீமியம் ரக மாடலாக இருக்கின்றது. இதனால், இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

இந்த ஆர்125 பைக்கின் டிசைன் தீமானது, புதிய ஆர் மற்றும் ஆர்15 ஆகிய மாடல்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், இதன் டைமென்ஷன் மற்றும் எஞ்ஜின் திறன் இதை ஒத்ததாக அமைந்துள்ளது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

இத்துடன், இந்த மோட்டார்சைக்கிளில் ட்யூவல் ஹெட்லைட் லேம்ப் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹெட்லைட் மற்றும் ரியர் பகுதியில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்த பெர்ஃபார்மென்ஸ் பைக்கில் ஸ்பிலிட் டைப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ரைடருக்கான சீட் இறக்கமாகவும், பின்பக்க சீட் சற்று தூக்கலாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்!

இவற்றுடன் தொழில்நுட்ப வசதியாக, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது, பைக்குறித்த அனைத்து தகவலை விரல் நுனியில் கிடைக்க உதவும். ஆர்125 பைக்கில் 124.7 சிசி திறனுடைய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14.8 பிஎச்பி பவரை 9,000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். மேலும், 12.4 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். இத்துடன் இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2019, 18:16 [IST]
English summary
Yamaha R125 MotoGP Edition Officially Revealed. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+