யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா ஆர்15 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஆர்15 வி3.0 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் யமஹா ஆர்15 வி3.0 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா ஆர்15 பைக் மாடல் இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடலாக வலம் வருகிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா ஆர்15 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஆர்15 வி3.0 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதி இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

வரும் ஏப்ரல் மாதம் முதல் 125சிசி திறனுக்கும் மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் வசதி கட்டாயம் என்கிற நிலையில், தற்போது யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்த வசதியை பெற்றிருக்கிறது. இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி3.0 மாடல் தண்டர் கிரே மற்றும் ரேஸிங் புளூ என்ற இரண்டு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டார்க்நைட் என்ற புதிய வண்ணமும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும்,, 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இடம்பெற்றுள்ளது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் மாடலானது ரூ.1.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Motors India has launched the 2019 YZF-R15 V3.0 with dual-channel ABS. The 2019 Yamaha R15 ABS edition comes with a starting price of Rs 1.39 lakh. The 2019 R15 V3.0 ABS now also available in a new colour option — Darknight (Black) and is priced at Rs 1.41 lakh. Both prices are ex-showroom (Delhi).
Story first published: Thursday, January 10, 2019, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X