128கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

அதிவேக பயணம் ஆபத்து என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மனதை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

மக்கள் தொகை, வருமை, வேலையில்லா திண்டாட்டம் இவையனைத்திலும் எப்படி இந்தியா முதன்மை வகிக்கின்றதோ, அதேபோன்றுதான், வாகன பயன்பாட்டிலும் இந்தியா முன்னணி இடத்தைப் பிடித்திருக்கின்றது.

அந்தவகையில், ஆட்டோமொபல் துறையில் இந்தியா உலகிலேயே நான்காவது இடத்தைப் பிடத்திருக்கின்றது. இது கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் கிடைத்த தகவலாகும்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

இது தற்போது அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஏனென்றால், கடந்த சில வருடங்களாக பெரும்பாலான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு, அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

அவ்வாறு, உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான, ஃபெர்ராரி, அஸ்டான் மார்டின், டுகாட்டி மற்றும் எம்வி அகஸ்டா உள்ளிட்ட நிறுவனங்கள், அதன் விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள்மூலம் இந்தியர்களுக்கு விருந்தளித்து வருகின்றன.

ஆனால், இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் இந்தியச் சாலைகளுக்கு ஏற்பவையாக இல்லை என்பதே, நிதர்சணமான உண்மை.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் உருக்குலைந்து, பள்ளம் மேடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. மேலும், சில சமயங்களில் ஆடுகள், மாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.

அதிலும், மிக முக்கிய தலைவலியாக ஜே வால்கர்ஸ் எனப்படும், பாதசாரிகளாலேயே பல்வேறு பிரச்னைகளை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதன்காரணமாகவே, வாகன ஓட்டிகள் எப்போதும் மிதமான வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனென்றால், இந்தியச் சாலைகளில் எப்போது பள்ளம் மேடு வரும், எப்போது மனிதர்கள் குறுக்கிடுவார்கள் என்பதே தெரியாது.

அதுபோன்ற, நேரங்களில் அதிகவேகம் என்பது, வாகன ஓட்டிக்கும் சரி, எதிர்புறத்தில் வருபவர்களுக்கும் அது ஆபத்தாக இருக்கின்றது.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

இந்நிலையில், இத்தகையை ஓர் ஆபத்தான சம்பவம்தான் அண்மையில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், மனதை உறைய வைக்கின்ற அளவிலான வீடியோ ஒன்றை கல்லிவந்தர்07 என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

அதில், யமஹா ஆர்15 வி3 பைக் அதிவேகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, பைக் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, அதைப் பார்க்காத இரு பெண்கள் மிகப் பொருமையாக சாலையைக் கடக்கின்றனர்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

அப்போது, ஒரு பெண் மட்டும், நடுவழியிலேயே தங்கிவிட, மற்றுமொரு பெண் முன்னேறி சென்றுவிடுகிறார். இவையனைத்தும், கண்ணிமைக்கும் நேரத்தில், நடந்துவிடுவதால், இளைஞரால் பைக்கைக் கட்டுபடுத்த முடியவில்லை. மேலும், அந்த யமஹா பைக் இருவருக்கும் இடையே நுழைந்தவாறு செல்கின்றது.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

பைக் சீறிப்பாய்ந்து வந்த வேகத்தில், அவர்கள்மீது மோதியிருந்தால், பெரும் அசாம்பாவிதம் ஏற்பட்டிருக்கு. ஆனால், அதிர்ஷ்டவசமாக, பைக்கரும் அந்த பெண்களும் தப்பியுள்ளனர்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

இச்சம்பவம், இரு சக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, அனைத்து வாகன ஓட்டிகளும் முறையான, வரையறுக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.

பொதுவாக, இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகள் சில, மணிக்கு 80 கிமீ வேகத்தையும், மணிக்கு 120 கிமீ வேகத்தையும் அங்கீகரிக்கின்றது.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

ஆனால், அவையனைத்தும் ஆபத்து குறைந்த சாலைகள் என்று கூறிவிட முடியாது. அவ்வாறு, வேகமாக செல்லும்போது, வாகன ஓட்டிகளே, அவர்களைக் காத்துக்கொள்ளும் விதமாக, அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதையும் போக்குவரத்துத்துறை வலியுறுத்துகின்றது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதே இல்லை. இதன்காரணமாகவே, அதிகளவிலான விபத்துகளை இந்திய சாலைகள் சந்தித்து வருகின்றன.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நீங்கள் எவ்வளவு பெரிய வித்தை தெரிந்த டிரைவராக இருந்தாலும் சரி, நீங்கள் பயன்படுத்துவது எவ்வளவு பாதுகாப்பு திறன் வாய்ந்த வாகனமாக இருந்தாலும் சரி, கணிக்க முடியாத சூழ்நிலையில், எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

ஆகையால், இதுபோன்ற சூழ்நிலைகளில் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பான பிரேக்கிங்கை வழங்கும்விதமாக நாட்டில் விற்பனையாகும், அனத்து 125 சிசி திறனுக்கும் அதிகமான எஞ்ஜின் திறனைக் கொண்ட வாகனங்களில் ஆன்டி லாக் பிரேக்கிங் எனப்படும் ஏபிஎஸ் வசதி இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

128 கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ...!

இந்த அம்சமானது, தற்போது நிகழ்ந்திருப்பதைப்போன்ற சம்பவங்களில் சிறப்பான பிரேக்கிங் திறனை வாகனத்திற்கு வழங்கும். ஆகையால், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் எனப்படும் இரு வகையிலான வசதியை கட்டாயம் வாகனங்களில் நிறுவ வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2019, 13:41 [IST]
English summary
Yamaha R15 Rider’s Near Miss At 128 Kph Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+