யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல மாடல் பைக்கான யமஹா ஆர்15 வி3.0-ன் விலையை உயர்த்தியுள்ளது. இப்பைக்கின் ஸ்டாண்டர்ட் மற்றும் டார்க்நைட் மாடல்களின் விலை ரூ.600 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

தற்போது டார்க்நைட் எடிசன் மாடலின் விலை 600 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.1,42,880க்கு விற்பனையாகவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு யமஹாவின் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் டார்க்நைட் மாடல்களுக்கு மட்டும் தான். மோட்டோஜிபி எடிசன்கள் எந்தவொரு விலை மாற்றமுமின்றி விற்கப்படவுள்ளது.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

இந்த விலை உயர்வுக்கு எந்தவொரு காரணமும் யமஹா நிறுவனத்திடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இதனால் மற்ற பைக் தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் தங்களது பைக்குகளை களத்தில் இறக்கும் சரியான நேரம் இது தான்.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

யமஹா ஆர்15 இந்திய மார்கெட்டில் மிகவும் பிரபலமான மாடல் பைக் ஆகும். தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் யமஹா ஆர்15-ன் மூன்றாவது தலைமுறையை யமஹா நிறுவனம் அப்டேட் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும் யமஹா ஆர்15-ன் தரத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 155சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினுடன் 10,000 ஆர்பிஎம்மில் 19பிஎச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை வழங்கும் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

இந்த பைக்கின் முன்புற சக்கரத்தில் டெலிஸ்கோப் ஃபோர்க்ஸும், பின்புற சக்கரத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் டெல்டாபாக்ஸ் அமைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. 282 மிமீ டிஸ்க் முன்புற சக்கரத்திலும் 220 மிமீ டிஸ்க் பின்புற சக்கரத்திலும் ப்ரேக் அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிகரமாக ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டம் உள்ளது.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

யமஹா ஆர்15 வி3.0 மாடல் 17 இன்ச் சக்கரங்களை கொண்டது. இதன் டயர்கள், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் நைலோக்ரிப் ஸாப்பர்ஸ் 100/80 மற்றும் 140/70 என்ற டயர் அளவுகளுடன் தயாரிக்கப்படுகின்றது. யமஹா ஆர்15 வி3.0 மாடல் பைக் இந்தியாவில், க்ரே, ரேசிங் ப்ளூ, டார்க்நைட் மற்றும் மோட்டோஜிபி என நான்கு விதமான கலர்களில் தயாரிக்கப்படுகிறது.

யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

யமஹா நிறுவனம் இந்த விலை உயர்வுக்கு எந்த காரணத்தையும் கூறவில்லை. இது மிக குறைவான விலை உயர்வாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரிய விலை அதிகரிப்பே. யமஹா ஆர்15க்கு போட்டியாக சந்தையில் இருக்கும் கேடிஎம் ஆர்சி125, சுசுகி கிஸ்ஸ்ர் 155எஸ்எஃப் மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 போன்ற பைக்குகள் யமஹாவின் விலை அதிகரிப்பால், தங்களது விலைகளை கணிசமாக குறைக்கலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2019, 18:43 [IST]
English summary
Yamaha R15 V3.0 Prices Increased In India: Price Hike Only For Standard & Darknight Edition Models
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+