மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

கடந்த மே மாதம் ஒரு ஆர்3 பைக்கை கூட யமஹா நிறுவனம் விற்பனை செய்யவில்லை. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்று யமஹா ஆர்3. யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில்தான் யமஹா நிறுவனம் ஆர்3 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. அதன்பின் அதன் விற்பனையும் சிறப்பாகவே இருந்து வந்தது.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

ஆனால் கடந்த மே மாதம் ஒரு ஆர்3 பைக்கை கூட யமஹா நிறுவனம் விற்பனை செய்யவில்லை. கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 உள்ளிட்ட பைக் மாடல்களுடன், யமஹா ஆர்3 போட்டியிட்டு வருகிறது. இந்த 2 பைக்குகளும் கடந்த மாதம் கண்ணியமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த சூழலில், ஒரு யமஹா ஆர்3 பைக் கூட விற்பனையாகவில்லை.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

ஆர்3 பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருவதன் காரணமாகவே, அதன் விற்பனை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யமஹா ஆர்3 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

சர்வதேச மார்க்கெட்களில் விற்பனையாகி வரும் யமஹா ஆர்3 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசதிகளை பொறுத்தவரை சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேபோல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஃபேஸ்லிஃப்ட மாடலிலும் இன்ஜினை பொறுத்தவரை மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

இதில், 321 சிசி, இன்லைன், ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்மில் 42 பிஎஸ் பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 29.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும். அதே சமயம் இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையானதாக இருக்கும்.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

யமஹா ஆர்3 பைக்கின் விலை 3.49 லட்ச ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் இன்னும் அதிகப்படியான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.30 ஆயிரம் வரை விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

கவாஸாகி நின்ஜா 300, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் பெனெல்லி 302ஆர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் இது போட்டியிடவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டில் மிகவும் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக யமஹா ஆர்3 உள்ளது. எனவே 2019 ஆர்3 மோட்டார்சைக்கிளின் Localization-ஐ அதிகரிக்கவும் யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் மிக சவாலான விலையை நிர்ணயிக்க முடியும்.

மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...

இன்றைய சூழலில் பைக்குகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் ஆர்3 பைக்கில் யமஹா நிறுவனம் ஆப்ஷனலாக மட்டுமே ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்குகிறது. எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் ஏபிஎஸ் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2019, 20:03 [IST]
English summary
Yamaha R3 Facelift India Launch Expected Soon. Read in Tamil
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+