செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

யமஹா நிறுவனம், அதன் பிரபல எம்டி-03 பைக்கை எதிர்காலத்திற்கு ஏற்பவாறு அப்டேட் செய்து வருகின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

யமஹா நிறுவனம், அதன் பிரபல பைக்குகளில் ஒன்றான எம்டி-03 பைக்கை இந்தியாவில் அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான பணியில் யமஹா நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும், அந்த பைக்குறித்த தகவலை அது தற்போது வெளியிட்டுள்ளது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

புதுப்பித்தலைப் பெற்று வரும் யமஹா எம்டி-03 பைக், அந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த யமஹா ஆர் 3 பைக்கின் நேக்கட் ரக மாடலாக உள்ளது. எனவே, ஆர்-3 பைக்கின் சில அம்சங்களை எம்டி-03 பைக் பெற்றிருக்கின்றது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

அந்தவகையில், எஞ்ஜின் மற்றும் தொழில்நுட்பங்கள் சிலவற்றை அது பெற்றிருக்கின்றது. அதேசமயம், தற்போது புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் எம்டி-03, தற்போதைய மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டவாறும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்தவகையில், அதிக வசதி மற்றும் கூடுதல் திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான மாற்றங்களை அது பெறவிருக்கின்றது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

இந்த பைக் 2020ம் ஆண்டிற்கானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டின் ஆரம்பம் அல்லது மத்தியில் அந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

புதுப்பித்தலின் காரணமாக, எம்டி-03 பைக் புத்தம் புதிய வடிவமைப்பில் காட்சியளிக்க இருக்கின்றது. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் எம்டி-07 பைக்கின் சிங்கிள் ஹெட்லைட் அம்சம் போன்ற டிசைன் தாத்பரியங்கள் சிலவற்றை அது பெறவிருக்கின்றது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

அத்துடன், இரு ட்வின் பைலட் மின் விளக்குகளையும் அது பெறவிருக்கின்றது. இவையனைத்தும் எல்இடி தரத்தினாலானவை ஆகும். இதே தரத்தினாலான மின் விளக்குகள்தான் எம்டி-09 மற்றும் எம்டி-05 பைக்குகளில் காட்சியளிக்கின்றன.

ஆனால், எஞ்ஜின் மட்டும் ஆர்-3 பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போன்று காட்சியளிக்க உள்ளது. அந்தவகையில், 321சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் எஞ்ஜினை அது பெற உள்ளது. அது அதிகபட்சமமாக 42எச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

இத்துடன், மெக்கானிக்கல் அம்சமாக கேஒய்பி யுஎஸ்டி ஃபோர்க் பைக்கின் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் இடம்பெற உள்ளது. தொடர்ந்து பிரேக்கிங் வசதிக்காக பைக்கின் முன் பக்க வீலில் 298மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட உள்ளது.

இதே தரத்திலான மெக்கானிக்கல் அம்சம்தான் அமெரிக்காவில் விற்பனையாகும் யமஹா எம்டி மாடல் பைக்குகளில் காட்சியளிக்கின்றது.

செம்மையான அப்டேட்டுடன் அடுத்த வருடம் களமிறங்குகிறது யமஹா எம்டி-03: சிறப்பு தகவல்!

எம்டி-03 பைக் ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது, அந்நாட்டின் மதிப்பில் 4,599 டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 3.27 லட்சம் ஆகும்.

ஆனால், இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, கூடுதல் விலையைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2019, 11:32 [IST]
English summary
Yamaha Revealed MT-03. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+