3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

யமஹா நிறுவனம் சர்வதேச சந்தையை மனதில் வைத்து, அதன் ஆர்வி15 வி3 மாடலை மூன்று புதிய வண்ணத் தேர்வில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், சர்வதேச சந்தைக்காக புத்தம் புதிய ஆர்15 வி3 மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் மூன்று புதிய வண்ணத் தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பைக்குறித்த செய்தியை வெளியிடும் பைக்வேல் எனப்படும் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த பைக் இந்தியாவில் புதிய வண்ண ஸ்கீமில் கிடைக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.

2019 யமஹா ஆர்15 வி3 மாடல் பைக்கின் வண்ணம் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கும் வகையிலும், அதன் ரசிகர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்கும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

அவ்வாறு, முதல் இடத்தில் ஸ்போர்ட் கருப்பு இருக்கின்றது. இது, சிவப்பு மற்றும் வெள்ளை நிற கிராஃபிக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கூடுதல் கவர்ச்சியாக அது காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப, அதன் கிராஃபிக்குகள் ஹெட்லேம்ப் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

இதேபோன்று, இரண்டாவதாக க்ரே மற்றும் மஞ்சள் நிறம் இருக்கின்றது. இதில் க்ரே, பேஸ் நிறமாகவும், மஞ்சள் ஹைலைட் செய்யும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறங்களும் பைக்கின் எடுப்பான இடங்களை மேலும் கோடிட்டு காட்டும் வகையில், ப்யூவல் டேங்க், எஞ்ஜின் கேஸ் கவர், பக்கவாட்டு பகுதி மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் காட்சியளிக்கின்றன.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மூன்றாவதும், கடைசியுமாக இருக்கும் கலர், யமஹா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் ஒய்இசட்எஃப்-ஆர்1 மாடலை ஒத்தவாறு தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, கருப்பு வண்ணத்துடன் கூடிய நீல நிறத்தில் இது காட்சியளிக்கின்றது. இதனைத் தனித்துவமாக காட்டும் வகையில், ஆர் என்ற கிராஃபிக், பைக்கின் பக்கவாட்டு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பைக்கின் வீலிற்கு நீல நிறம் வழங்கப்பட்டுள்ளது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த புதிய யமஹா பைக்கில் வண்ண மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அந்த பைக்கில் 155சிசி திறன் கொண்ட அதே சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது, 19 பிஎச்பி பவரை 10,000 ஆர்பிஎம்-லும், 15 என்எம் டார்க்கை 8,500 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த எஞ்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

சர்வதேச சந்தைக்காக களமிறங்கியிருக்கும் இந்த பைக்கில் இன்வெர்டட் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் இந்திய மாடலில் அது டெலிஸ்கோபிக் ஃபோர்க்காக பொருத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பயணத்திற்காக பைக்கின் இரு வீலிலும் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

இந்தியாவிற்கு புதிய வண்ண ஆர்15 வி3 மாடல் எதிர்பார்க்கப்பட்டநிலையில், முன்னதாக சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிற்கு புதிய வண்ணம் கொண்ட ஆர்15 வி3 மாடல் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்!

அதேபோன்று, யமஹா நிறுவனம் இந்தியாவிற்கான பிரத்யேக மோட்டோஜிபி தீமிலான ஆர்15 வி3 மாடலை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2019, 16:43 [IST]
English summary
Yamaha Unveiled 3 New Colours In R15 V3. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+