யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம்!

யமஹா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரத்யேக வசதியாக, ஸ்கூட்டரின் பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக, உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டை ஊக்கும்விக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

இதன்காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள், பெரும்பாலும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் உற்பத்தியில், அதிகளவிலான முனைப்பைக் காட்டி வருகின்றன. அதேசமயம், இந்தியா போன்ற சில நாடுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

இதனால், தற்போது பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் ஆதிக்கத்தை மின் வாகனங்களின்மூலம் செலுத்தும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், யமஹா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வகான நிறுவனமான யமஹா, அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யதுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக, கழட்டி மீண்டும் பொருத்தும் வகையிலான பேட்டரி வசதியை அந்த நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

யமஹா நிறுவனத்தின்மூலம் வெளிவரும் முதல் ஜீரோ-எமிஸ்ஸன் வாகனமான இதற்கு இசி-05 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின், கழட்டி மாட்டுக் கொள்ளும் வகையிலான பேட்டரிக்காக, தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கும் கோர்கோரோ என்ற நிறுவனத்துடன், யமஹா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

யமஹாவின் இந்த புதிய வசதி கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி தீர்ந்துவிட்டால், பேட்டரியை மட்டும் தனியாக கழட்டி, சார்ஜிங் நிலையத்தில், சார்ஜ் செய்ய ஒப்படைத்து விட முடியும். மேலும், அங்கிருந்தே ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை எடுத்து இசி-05 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்திக் கொள்ளவும் முடியும். இதற்கான வசதியை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளன.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

யமஹாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், குறைந்தது 80 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம். அதேசமயம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நகரம் அல்லாத பகுதியில் பயணிக்கும்போது, இதை விடு கூடுதலான தூரம் செல்லும் என கூறப்படுகிறது.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

ஆனால், இந்த இசி-05 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுக்க முழுக்க நகர பயன்பாட்டை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்கூட்டர் குறித்த மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!

யமஹா நிறுவனம், வருகின்ற ஆகஸ்ட் மாதம் தாய்வான் சந்தையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகின் பல முன்னணி நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2019, 14:51 [IST]
English summary
Yamaha Unveils EC-05 Electric Scooter. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+