இளைஞர்களை கவரும் அடுத்த ஸ்போட்ர்ஸ் பைக் அறிமுகம்..!!!!
இளைஞர்களின் கவரும் ஸ்போட்ர்ஸ் பைக் தயாரிப்பு நிருவனமான யமஹா தனது அடுத்த தயாரிப்பான யமஹா YZF R3 பைக்கினை வரும் நவம்பரில் அறிமுகம் செய்கிறது. யமஹா YZF R3 பைக்கின் சிறப்பு அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

சமீபத்தில் யமஹா நிறுவனம் எஃப்இசட் ரக பைக்குகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது யமஹா YZF R3 பைக் நவம்பரில் விற்பனைக்கு வரும் என யமஹா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் யமஹா வாடிகையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதிய YZF R3 பைக் மே மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்த யமஹா நிறுவனம் தற்போது உறுதியாக நவம்பரில் விற்பனைக்கு வரும் அறிவித்துள்ளது.

YZF R3 பைக் யமஹாவின் மற்ற பைக்குகளை விட டிசைனில் மாறுபட்டுள்ளது. இதன் கூர்மையான முன்பக்க டிசைன், சாய்வான எல்இடி முன்பக்க விளக்குகள் போன்றவை இந்த பைக்கின் முக்கிய அம்சமாக உள்ளது. யமஹா YZF R3 பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள்தான் முதலில் பொருத்தப்பட்டது. அனால் இந்திய சாலைகளை கருத்தில் கொண்டு சாதாரண டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய யமஹா YZF R3 பைக்கில் மேம்படுத்தப்பட்ட பல இயக்கங்களை கொண்ட தகவல் டிஸ்ப்ளேயில், கியர் பொஸிசன், எரிபொருள் நிலை, நேரம், வெப்பநிலை ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் ஓட்டுபவரின் வசதிக்கேற்ப பெட்ரோல் டேங் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன.

புதிய யமஹா YZF R3யில் உள்ள அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 321CC எஞ்சின் 41.4 BHP பவரையும் 29.6NM டார்க் திறனையும் தருகிறது. மேலும் 6 கியர்களுடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது. மேலும் இதில் டூயல் சைலென்சர் இதில் பொருத்தப்பட்டுள்ளது இதனால் பைக் ஓட்டும்போது புதிய உணர்வை தரும் என கருதப்படுகிறது
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இதற்க்கு முன் கடந்த 2015ல் இருந்து 2018ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட யமஹா YZF R3 பைக்குகளில் ரேடியேட்டர் ஹோஸ் மற்றும் ஸ்பிரிங் டார்சன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டதால் யமஹா நிறுவனம் தானாக முன்வந்து அதனை சரிசெய்தது. இந்த தவறு இந்த முறை நடந்துவிட கூடாது என கட்சிதமாக புதிய யமஹா YZF R3 பைக்கை வடிவமைத்துள்ளனர்.

புதிய யமஹா YZF R3 பைக் தற்போது விற்பனையாகும் YZF R3 மாடலின் விலையை விட ரூபாய் 10,000 முதல் 15,000 கூடுதலாக இருக்கும் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய யமஹா YZF R3 நிஞ்ஜா 300 மற்றும் கேடிஎம் RC390 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஆர் எக்ஸ் 100 முதல் FZ பைக் வரை இளைஞர்களிடையே வெற்றிநடை போட்டுவரும் யமஹா நிறுவனம் யமஹா YZF-R3 பைக் விற்பனையிலும் தனது தரத்தை நிருபித்துள்ளது. இந்த பைக் மற்ற நிறுவனத்தின் ஸ்போட்ர்ஸ் ரக பைக்குகளுக்கு சவாலாக அமையும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








