யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

யமஹா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தை வழங்கும் வகையில், புதிய மாடல் பைக் ஒன்றை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

இளைஞர்களைக் கவருகின்ற வகையிலான தோற்றமுடைய பைக்குகளை அறிமுகம் செய்வதில் யமஹா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், புதிய யமஹா ஆர் 3 மாடலின் அப்கிரேடட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

இந்த பைக்கை அந்நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டே இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

அப்போது, அந்த பைக்கில் அதிகளவில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், அதனை அவ்வப்போது சீர் செய்ய திரும்பி அழைக்கப்பட்ட சூழலே காணப்பட்டது. மேலும், அந்த மாடலின்மீது தொடர் புகார்கள் வந்ததன் காரணமாக யமஹா ஆர்3 பைக் இந்திய சந்தையை விட்டு விலக்கிக் கொள்ள யமஹா முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

இந்நிலையில், அதே மாடலை புதிய துடிப்பான அப்டேட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக யமஹா அறிவித்துள்ளது. இதனை வருகின்ற விழாக் காலத்தை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஆகையால், யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்தாக யமஹா ஆர்3 மாடலின் அப்டேடட் வெர்ஷன் அமைய இருக்கின்றது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

தொடர்ந்து, இந்த பைக்கிற்கான அறிமுகம் உறுதி செய்யப்பட்டநிலையில், ஒரு சில டீலர்கள் அதற்கான முன்பதிவைச் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு டீலர்களையும் பொருத்து ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

அதேசமயம், இந்த பைக்கின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், புதிய அப்டேட் யமஹா ஆர் 3 மாடலின் விலை விடை தெரியாத கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஆனால், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சில அப்டேட்டுகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. அந்தவகையில், பல்வேறு காஸ்மெட்டிக் மாற்றங்கள் புதிய பேஸ்லிஃப்ட் ஆர் 3 மாடலில் இடம்பெற்றிருக்கின்றது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

குறிப்பாக, பைக்கின் புதிய தோற்றத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், பாக்ஸ் ஏர் இன்டேக் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இது, பார்ப்பதற்கு ஆர் 1 மாடலில் இடம்பெற்றிருக்கும் வசதியைப் போன்று காட்சியளிக்கின்றது.

அதேசமயம், இந்த அமைப்பு மட்டுமின்றி வின்ட்ஷீல்ட், ப்யூவல் டேங்க் பகுதி, பின்பக்கத்தின் ஷார்ப்பான பகுதி உள்ளிட்டவை ஆர் 1 பைக்கை தழுவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

இத்துடன், நவீன தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு தேவையான, நேரம், எஞ்ஜின் ஹீட், பெட்ரோல் அளவு உள்ளிட்ட பல தகவல்களை வழங்கும்.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் 321 சிசி திறனை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 41 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் காணப்படும் இதன் எஞ்ஜின் பிஎஸ்-6 தரத்திலானதாகும்.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

மேலும், யமஹா ஆர்3 பைக்கில் சொகுசான ரைடிங் அனுபவத்திற்காக கேஒய்பி யுஎஸ்டி ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கிளிப்-ஆன் ஹேண்டில்பார்களும் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி!

அதேசமயம், பாதுகாப்பு வசதிக்காக சிங் டிஸ்க் பிரேக் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2019, 17:48 [IST]
English summary
Yamaha YZF-R3 Launch Scheduled For 19 December: All Details. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+