டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

தலைநகர் சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் பைக் கஸ்டமைஸ் நிறுவனம், யமஹா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கை மாடிஃபை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் கை வண்ணத்தால், இந்த பைக் புதிய அவதாரத்தைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

யமஹா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒய்இசட்எஃப்-ஆர்3 மாடலும் ஒன்று. இந்த மாடலை சென்னையைச் சேர்ந்த க்நைட் ஆட்டோ கஸ்டமைஸர் என்னும் நிறுவனம், சமீபத்தில் மாடிஃபை செய்துள்ளது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

இந்நிறுவனம், மேற்கொண்ட பிரத்யேக நடவடிக்கையின் காரணமாக, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மாடல் புதிய லுக்கினைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், அது டீசன்டான லுக்கைப் பெற்று, புதிய அவதாரத்தில் காட்சியளிக்கின்றது.

அதற்கேற்ப வகையில், யமஹாவின் இந்த ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கிற்கு மேட் க்ரே மற்றும் ஹைலைட் செய்துகாட்டக்கூடிய டிகேல்கள் வழங்கப்பட்டுள்ளன.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

அவ்வாறு, மேட் க்ரே நிறத்தை யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கிற்கு வழங்கு முடிவு செய்த க்நைட் ஆட்டோ கஸ்டமைஸர் நிறுவனம், அந்நிறத்தை பைக்கின் வின்ட்ஸ்கிரீன் தொடங்கி டெயில் பகுதி வரை வழங்க முடிவு செய்தது. அத்துடன், சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் கார்பன் பைஃபர் வழங்கப்பட்டுள்ளது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

மேலும், யமஹா நிறுவனத்தின் லோகோ, பைக்கின் ப்யூவல் டேங்க் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இத்துடன், பைக்கின் பக்கவாட்டு பகுதியை மேலும் கூடுதல் கவர்ச்சியாக காட்டும் வகையில், கூடுதல் டீகேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தவகையில், ஃபியட், மோடல், யமஹா, ஸ்பீட் ஹவுஸ், யமலூப், மான்ஸ்டர், அக்ரோபோவிக் மற்றும் பைரெல்லி ஆகிய நிறுவனங்களின் டிகேல் ஸ்டிக்கர்கள் அதன் பக்கவாட்டு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கஸ்டமைஸர் நிறுவனத்தின் இந்த பிரத்யேக நடவடிக்கையால், பைக் ஓர் புதிய அவதாரத்தைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், அது டீசன்டான லுக்கிலும் காட்சியளிக்கின்றது.

இத்துடன், க்நைட் ஆட்டோ கஸ்டமைசர் நிறுவனம், பைக்கின் பல பகுதிகளை ஹைலைட் செய்து காட்டும் வகையில், கார்பன் ஃபைபர் விராப்பரை வழங்கியுள்ளது. மேலும், பைக்கின் ஸ்பிளிட் இருக்கையை பிரித்து காட்டும் வகையிலும் அதனை பயன்படுத்தியுள்ளது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

இத்தகைய புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் இந்த ஒய்இசட்-ஆர்3 பைக் பழைய மாடல் என கூறப்படுகின்றது. அதனை உறுதி செய்யும் வகையில், பைக்கில் ஏபிஎஸ் வசதி இடம்பெறவில்லை.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

இந்த யமஹா ஆர்3 பைக்கில் அந்நிறுவனம், 321 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை பயன்படுத்தி வருகின்றது. அது ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட், ப்யூவல் இஞ்ஜெக்டட் திறனைப் பெற்ற எஞ்ஜினாகும். இது, 10,750 ஆர்பிஎம்மில் 42 எச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

இத்துடன், இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷனுக்காக கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் பிரிலோட் அட்ஜெஸ்டபிள் மோனோசாக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், பிரேக்கங் வசதிக்காக ஆர்3 பைக்கின் முன்பக்க வீலில் 298 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

யமஹா நிறுவனம், ஆர்3 பைக்கினை அடுத்த தலைமுறைக்கு ஏற்பவாறு தயார் செய்து வருகின்றது. அந்தவகையில், புதிதாக அமலாக இருக்கும் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜினை புதிய யமஹா ஒய்இசட்-ஆர்3 பைக் பெற இருக்கின்றது. இந்த பைக் நடப்பாண்டின் இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...

இத்துடன், புதிய மடால் யமஹா ஒய்இசட்-ஆர்3 பைக்கில் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இடம்பெற உள்ளது. மேலும், மெட்ஸிலர் டயர்கள் ஸ்டாண்டர்டு வசதியாக இந்த பைக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றத்தால், இந்த பைக்கின் விலையிலும் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. அவ்வாறு, இந்தியாவின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் அது ரூ.3.51 லட்சம் என்ற விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Courtesy: Knight Auto Customizer, Chennai

Most Read Articles

English summary
Yamaha YZF-R3 modified with Matte Grey. Read In Tamil.
Story first published: Monday, July 22, 2019, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X