யமஹா ஒய்இசட்-ஆர்3 பைக்கை ட்ரான் பைக்காக மாற்றிய சென்னை நிறுவனம்... அசத்தல் புகைப்படம் உள்ளே!
யமஹா நிறுவனத்தின் ஒய்இசட்-ஆர்3 மாடல் பைக்கை சென்னையைச் சேர்ந்த, வாகன மாடிஃபை நிறுவனம், ட்ரான் திரைப்படத்தில் வரும் பைக்கைப்போன்று மாடிஃபைச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் சிலவற்றில், வாகனங்களை மாடிஃபை செய்வது சாதாரணமான விஷயமாக கருதப்பட்டாலும், இந்தியாவில் அது வாகன சட்டத்தை மீறும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வாகன பிரியர்கள் சிலர், அவர்களுக்கு பிடித்தமான வாகனங்களை அவர்களின் தேவைக்கேற்ப மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு, சில வாகனங்கள், இதுதான் அதுவா...? என ஆச்சரியப்படும் வகையில் உருவம் மாற்றத்தைப் பெறுகின்றன. அதற்கேற்ற வகையில், வாகனங்களை மாடிஃபை செய்யும் நிறுவனங்கள் வேலைப்பாடுகளை மேற்கொள்ளுகின்றன.

அந்தவகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும், பைக் மாடிஃபை நிறுவனம், யமஹா நிறுவனத்தின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கை, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மாடிஃபை செய்துள்ளது.
அவ்வாறு, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கிற்கு, பிரபல ஆங்கில திரைப்படமான ட்ரான் (Tron) படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப் போன்று ஸ்பெஷல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கிற்கு, பிரபல ஆங்கில திரைப்படமான ட்ரான் (Tron) படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப் போன்று ஸ்பெஷல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக மாற்றத்தால், அந்த பைக் கடுமையான இருட்டில் கூட ஒளிரும் தன்னமையுடன் காட்சியளிக்கின்றன. இதனை வார்த்தையால் விவரிப்பதை விட, அதனை நீங்கள் காட்சியாக, கீழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தின்மூலம் காணுங்கள்...

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கிற்கு பெரியளவில் மாற்றம் கொடுக்கப்படவில்லை. மாறாக, அதன் பெயிண்டிங் மற்றும் கிராஃபிக்குகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது, புகழ்வாய்ந்த ட்ரான் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அணிந்திருக்கும் ஒளிரும் தன்மை ஆடைப் போன்ற அமைப்பை, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பெற்றுள்ளது.

முன்னதாக இந்த பைக்கிற்கு, மேட் ஃபினிஸிங் கருப்பு வண்ணத்தைக் கொடுத்த அந்நிறுவனம், பின்னர், அந்த பைக்கின் கட்டுமஸ்தான உடல்வாகுகளை ஹைட்லைட் செய்துகாட்டும் வகையிலான ஒளிரும் ஸ்டிக்கர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளது.

இது, பகலில் சாதாரண லைனைப்போன்றும், இரவில் ஒளிரும் லைன்களாகும் காட்சியளிக்கும். ஆகையால், இந்த பைக்கைப் பகலில் பார்ப்பதைக் காட்டிலும், இரவில் பார்த்தாலே சிறப்பாக காட்சியளிக்கின்றது.
அதுமட்டுமின்றி, இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதி மற்றும் முன்பக்க மாஸ்க்கில் பேட்மேன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, யமஹா ஆர்3 பைக்கின் எக்சாஸ்ட் சிஸ்டமும் மாற்றப்பட்டுள்ளது.

யமஹா நிறுவனத்தின் இந்த ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக் இந்தியாவில் இரு வண்ணத்தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவ்வாறு, ரேசிங் நீளம் மற்றும் மக்மா கருப்பு ஆகிய நிறத்தேர்வில் கிடைக்கின்றது.

மாடிஃபிகேஷனின்போது செய்யப்பட்ட கருப்பு நிறமும், ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும் மக்மா கருப்பு நிறத்திற்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதைப்போன்று காட்சியளிக்கவில்லை. இருப்பினம், மாடிஃபையின் அலங்கரிக்கப்பட்ட கருப்பு நிறம், மேட் ஃபினிஸிங்கில் காட்சியளிப்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.

ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கில் 321சிசி திறன் கொண்ட, ட்வின் சிலிண்டர், லிக்யூட் கூல்ட், ப்யூவல் இன்ஜெக்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 42 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷனுக்கு கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக ஆர்3 பைக்கின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பு வசதிக்காக அந்த வீல்களுக்கு ஆண்டிலாக் பிரேக்கிங் வசதி எனப்படும் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக், இந்தியாவில் கவாஸாகி நிஞ்சா 300 பைக்குடன் போட்டியிடும் வகையில் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அதேசமயம், அதற்கு டஃப் கொடுக்கும் வகையில், கவாஸாகி நிஞ்சாவைக் காட்டிலும் ரூ.53 ஆயிரம் குறைவான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக் ரூ.1.53 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








